Range Rover முதல் Skoda வரை., 2025-ல் அறிமுகமாகும் புதிய கார்கள்
4 தை 2025 சனி 07:45 | பார்வைகள் : 430
2025-ஆம் ஆண்டு பிரித்தானியாவில் புதிய கார்கள் அதிகளவில் அறிமுகமாகும், அதிலும் பெரும்பாலானவை மின்சார கார்களாக இருக்கும்.
விலைகுறைவான மின்சார SUV-க்கள் £22,000 கீழ் சந்தைக்கு வர இருப்பதால், 2025 குறைந்த செலவில் மின்சார கார்கள் அதிகம் விற்பனையாகும் ஆண்டாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுமக்கள் எதிர்பார்க்கும் சில முக்கிய கார்கள்:
1. Range Rover Electric
- எதிர்பார்க்கப்படும் விலை: £150,000
- 400 மைல்கள் ரேஞ்சுடன் மிகப்பெரிய ஆடம்பர மின்சார SUV
2. BMW iX3
- விலை: இன்னும் உறுதி செய்யப்படவில்லை
- உயர் வேக சார்ஜிங் மற்றும் மேம்பட்ட டெக்னாலஜி.
3. Hyundai Ioniq 9
- விலை: £65,000 - £80,000
- 7 இருக்கைகள் கொண்ட பெரிய SUV
4. Dacia Bigster
- விலை: £20,000
- மலிவான, சிறிய ரக SUV
5. Cupra Raval
- விலை: £20,000
- 270 மைல்கள் ரேஞ்சுடன் சிறிய மின்சார கார்
6. Alpine A290
- விலை: £30,000+
- லேட்டஸ்ட் டெக்னாலஜி கொண்ட அழகான Hatch கார்
7. Fiat Grande Panda
- விலை: £22,000
- பழைய பாண்டாவின் இத்தாலிய அடையாளத்தை மீட்கவரும் கார்
8. Polestar 5
- விலை: £70,000 - £100,000
- Tesla Model Sக்கு போட்டியாக உருவாகும் கார்
9. Ford Puma Gen E
- விலை: £29,995
- இளம் தலைமுறைக்கு ஏற்ற மின்சார கார்
10. Renault 4 E-Tech
- விலை: £30,000 கீழ்
- ரெட்ரோ ஃப்யூச்சரிஸ்டிக் வடிவமைப்புடன் பாரம்பரிய குடும்ப கார்
11. Skoda Epiq
- விலை: £22,000
- சிறிய SUV ஆனாலும் இன்டீரியரை பிரம்மாண்டமாக மாற்றும் புதிய மாடல்.
12. Volkswagen ID.2
- விலை: £22,000
- EV Golf-க்கு மாற்றாக வரும் கார்
இந்த கார்கள், புதிய டெக்னாலஜி மற்றும் சிறந்த Range-உடன் 2025ல் பிரித்தானிய கார்களின் சந்தையை மாற்றி அமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.