▶ பரிசில் இருந்து புறப்பட்ட விமானம் 17 நிமிடங்களில் தரையிறங்கியது!
4 தை 2025 சனி 18:03 | பார்வைகள் : 4256
பரிஸ் சாள்-து-கோல் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் ஒன்று இயந்திரப் பழுது காரணமாக 17 ஆவது நிமிடங்களில் மீண்டும் தரையிறங்கியது.
பரிசில் இருந்து பர்சிலோனாவுக்கு புறப்பட்ட விமானம் ஒன்றே உடனடியாக திரும்பி வந்து தரையிறங்கியத். விமானத்தில் அழுத்தம் (pressurisation) குறைவந்ததாக அறியப்பட்டதன் பின்னர் அவ்விமானம் உடனடியாக மீண்டும் தரையிறப்பட்டது.
அதிஷ்ட்டவசமாக அசம்பாவிதங்கள் எதுவும் இடம்பெறாமல் தவிர்க்கப்பட்டது.
எயார் பிரான்சுக்கு சொந்தமான குறித்த விமானம் உடனடியாக தொழில்நுட்ப சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டது.
விமானத்தில் பயணிகள் அச்சத்துடன் இருக்கும் காட்சிகள் இணையத்தில் வைரலாகியுள்ளன.