நடிகர் பிரபுவுக்கு மூளையில் அறுவை சிகிச்சை !
6 தை 2025 திங்கள் 09:25 | பார்வைகள் : 358
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகன், இளைய திலகம் பிரபுவுக்கு மூளையில் அறுவை சிகிச்சை நடந்ததாக செய்திகள் வெளியாகி உள்ளன. தற்போது அவர் நலமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்த நடிகர் பிரபு, ஏராளமான படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். தற்போது அவர் குணச்சித்திர நடிகராக நடித்து வருகிறார். இந்நிலையில் திடீரென, அவருக்கு மூளையில் அறுவை சிகிச்சை நடந்தது என கூறப்படுகிறது.
இதுகுறித்து வெளியான செய்தியில், ‘நடிகர் பிரபு, தலைவலி மற்றும் காய்ச்சலால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மூளை தமனியில் பிளவு ஏற்பட்ட நிலையில் வீக்கம் அல்லது பலூன் கண்டுபிடிக்கப்பட்டது. இதற்காக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
அறுவை சிகிச்சைக்கு பின், பிரபு தற்போது நலமாக உள்ளார். அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீட்டிற்கு சென்று விட்டார். மேலும், அவருடைய குடும்பத்தினர் அவரை கவனித்து வருவதாகவும், ரசிகர்கள் கவலைப்பட வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, நடிகர் பிரபு விரைவில் நலமுடன் திரும்பி சினிமாவில் நடிக்க வேண்டும் என ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.