Factum Perspective: ஒருங்கிணைந்த எல்லை முகாமைத்துவ முறைமைக்கான தேவைப்பாடு
6 தை 2025 திங்கள் 13:41 | பார்வைகள் : 136
நவம்பர் 12, 2024 அன்று, இலங்கையின் கொழும்பில் நடந்த தெற்காசியாவிலிருந்து தொழிலாளரின் புலம்பெயர்கை: பிரச்சினைகள் மற்றும் கரிசனங்கள் (தெற்காசிய சிந்தனைக் குழுக்களின் கூட்டமைப்பு: COSATT) புத்தக வெளியீட்டு விழாவின் போது நடந்த கலந்துரையாடல்கள் இலங்கையின் எல்லை முகாமைத்துவம் குறித்த பல்வேறு கரிசனங்களை எடுத்துரைத்தமையால் இந்த விடயத்தைப் பற்றி என்னை மேலும் சிந்திக்க தூண்டியது.
இலங்கை 2019 இல் ஓர் ஒருங்கிணைந்த எல்லை முகாமைத்துவ முறைமையை ஆரம்பித்ததுடன், இதன் எழுத்தாளர், கடற்படைத் தலைமையகத்தில் பணிப்பாளர் நாயகம் என்ற வகையில், அதன் நோக்கம் மற்றும் எண்ணக்கரு மற்றும் அது எவ்வாறு நடைமுறைப்படுத்தப்பட்டது என்பதை நன்கு அறிந்திருந்தார்.
அதன் தேவைப்பாட்டை முன்னறிந்து, ஆரம்ப திட்டத்தை ஆதரித்ததால், கடற்படையானது, அமுலாக்கப் பயிற்சிக்கு நியமிக்கப்பட்ட பணியாளர்களைக் கொண்டிருந்தது. இந்த பணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட குழு தனிநபர் தரவு கோப்பிடுகை மற்றும் தரவுத்தள முகாமைத்துவத்தை நன்கு அறிந்திருந்தது.
உலகளாவிய மற்றும் பிராந்திய ஏற்றுக்கொள்ளலுக்கான வலுவான ஒருங்கிணைக்கப்பட்ட அமைப்பை அமுல்படுத்துவதற்காக, ஒவ்வொரு குடிமகனும் தீவுக்கு வருகை தருகின்ற ஒவ்வொருவரும் பதிவுசெய்யப்பட்டு அவர்களின் சுயவிவரங்கள் சரிபார்க்கப்பட்டு, அவசியமான நபர்கள் கண்காணிக்கப்படுகின்ற, இணைய அடிப்படையிலான முறைமையைக் கொண்டிருப்பதே திட்டமாகும்.
2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புகளுக்குப் பிறகு இது ஒரு கவனத்துக்குரிய விடயமாக மாற்றமடைந்ததுடன், இது தொடர்பான விசாரணைகள் இந்த தீவில் அவசியமான சமுதாயங்களுடன் ஈடுபடுவதற்கு அண்டை நாடுகளில் இருந்து வெறுப்புணர்வை வெளிப்படுத்துபவர்கள் தங்களது விருப்பப்படி எவ்வாறு வருகை தந்தார்கள் என்பதை வெளிப்படுத்தியது.
இந்த அபிவிருத்திகள் அனைத்தும் எல்லைக் கட்டுப்பாட்டு பொறிமுறைகளை பொருத்தமானதாக ஆக்கியது. ஆயினும் அந்த நேரத்தில் செயற்படுத்தப்பட்ட பொறிமுறையானது பரிதாபகரமாக போதுமானதாக இருக்கவில்லை. இது வருகை தருகின்ற வெளிநாட்டினர் உள்ளூர் சமூகத்தில் ஈடுபடும் வரை பொதுவாக அவதானித்தது. அதனைத் தொடர்ந்து, களமட்டத்தில் உள்ள உளவுத்துறை வலையமைப்புகள் அவர்களைத் தேடிக் கண்டறிய ஆரம்பிக்கும்.
பல்வேறு செயற்பாடுகளை இந்தியா கண்காணித்து எம்மை எச்சரித்து வருவதால், இந்தப் பிராந்தியத்தில் உள்ள எவரையும் விட இந்தியா மிகவும் முன்னிலையில் இருந்தது. அதில் ISIS தொடர்பான நடவடிக்கைகளுக்காக கைது செய்யப்பட்ட நபர்களின் விவரங்களையும், ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பில் ஈடுபட்ட இலங்கை பிரஜைகள் கேரள மாநிலத்தில் தங்கள் தொடர்புகளுடன் ஈடுபட்ட போதான இலங்கை பிரஜைகளின் விவரங்களையும் கொண்ட இணைய அடிப்படையிலான திறந்த மூல இணையதளம் கூட இருந்தது.
தெற்காசியாவிலிருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர் பொருளாதாரம் மற்றும் நிதி நெருக்கடிகள் காரணமாக தாங்கள் தஞ்சம் புகுந்த நாடுகளில் நலிவடைந்த நிலையில் உள்ளனர். அவர்களின் பொருளாதார நிலையைப் பொறுத்து, நிதியியல் நன்மைகள் தொடர்பான வாக்குறுதியின் கீழ் அவர்கள் தீவிரவாத சுரண்டலுக்கு ஆளாகிறார்கள்.
இந்த நடவடிக்கைகளை நாம் ஏற்கனவே கண்டிருக்கின்றோம், இன்றைய புவிசார் அரசியல் நிலப்பரப்பில், அவை தொடரும், இல்லையெனில் அதிகரிக்கப் போகின்றது. இதற்கு அறுகம் குடாவில் இஸ்ரேலியர்கள் மீது திட்டமிடப்பட்ட இலங்கை தாக்குதல் சம்பவம் ஒரு சிறந்த உதாரணமாகும்.
காசாவுக்காக பழிவாங்க விரும்புபவர்கள் வலுக்குறைவான இலக்குகளை எதிர்பார்ப்பதால், இந்த மாற்றங்களை இலங்கை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அமெரிக்கா அல்லது ஐரோப்பாவில் வலுவான, நிரூபிக்கப்பட்ட கண்காணிப்பு மற்றும் பின்தொடர்தல் முறைமைகள் இருப்பதால் அவர்கள் அமெரிக்கா அல்லது ஐரோப்பாவை குறிவைக்க மாட்டார்கள். எங்களிடம் அவ்வாறில்லை. வஹாபிசம் அல்லது ஏதேனும் மதவழியான அடிப்படைவாத கடும் போக்காளர்கள் அல்லது தமிழ் ஈழம் போன்ற இன அடிப்படையிலான சித்தாந்தங்கள் வளைகுடா அல்லது வேறு எந்த சாத்தியமான நாடுகளிலும் உள்ள பொருளாதார செழுமையை நாடும் நலிவடைந்த புலம்பெயர்ந்தோரை இலக்கு வைக்க வாய்ப்புள்ளது.
மக்கள் பல நூற்றாண்டுகளாக புலம் பெயர்ந்துள்ளனர். சமூகங்கள் மற்றும் சமுதாயங்களின் அபிவிருத்திக்கு புலம்பெயர்தல் அவசியமானதாகும். இது புதிய சிந்தனை, புதிய நிர்வாக மற்றும் நடத்தை அம்சங்களை கொண்டுவருவதுடன் அவை அனைவருக்கும் நன்மை பயக்கும்.
சமூகங்கள் எப்போதும் புலம்பெயர்தல் மூலமாக பயனடைகின்றன என்பதை வரலாற்று அபிவிருத்திகள் நிரூபித்துள்ளன. 1980 களின் நடுப்பகுதியில் துபாய் அதன் வளர்ச்சியின் உச்சத்தில் இருந்தபோது, பல இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அதனை இன்றைய நிலைக்கு மாற்ற கடுமையாக உழைத்தனர்.
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அவர்கள் கடினமாக உழைத்து சம்பாதித்த பணத்தை தங்கள் குழந்தைகளுக்கு சிறந்த கல்விக்காகவும் அவர்களின் வாழ்க்கை முறைக்காகவும் பயன்படுத்தியதால், இலங்கை சமூகமும் பயனடைந்தது. அவ்வாறு அனுப்பப்படும் பணம் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த செயற்திட்டங்களில் முதலீடு செய்வதற்கு அரசாங்கங்களுக்கு உதவுவதால் இவை தேசிய அபிவிருத்திக்கும் பங்களித்தன.
இந்த திறந்த வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வாய்ப்புகள் எப்போதும் புலம்பெயர்வு மற்றும் சுற்றுலா துறையைத் தூண்டும். இது பாதுகாப்பைப் பேணுவதற்கான தேசியத் தேவைப்பாட்டை பூர்த்தி செய்யும் வலுவான எல்லை முகாமைத்துவ முறைமையில் முதலீடு செய்வதற்கு இலங்கை அரசாங்கத்தை நிர்ப்பந்தித்துள்ளது.
இலங்கையில் வருகைக்கு பின்னரான விசா அனுமதிகள், அதிகரித்த சுற்றுலா தெரிவுகள் மற்றும் தொழிலாளர் பற்றாக்குறை ஆகியவை உறுதியான எல்லை முகாமைத்துவத்தை கோருகின்ற பல்வேறு காரணிகளாகும். இது வெறுமனே குடிவரவு சட்டங்களுக்கு அப்பாற்பட்டதாகும். அவர்களுக்கு ஓர் ஒருங்கிணைந்த மற்றும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட அணுகுமுறை அவசியமாகின்றது
மாலைத்தீவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட "Imuga" அமைப்பு அத்தகைய அணுகுமுறைக்கு ஒரு சிறந்த உதாரணமாகும். அந்த முறைமையில் வரவேற்புத்தளங்களில் சரிபார்க்கப்பட்ட தற்போதைய புகைப்பட அடையாளம் அவசியமாகும். இது பல்வேறு அவசியமான நபர்களைப் பற்றி அலுவலர்கள் தொடர்ந்து புதுப்பிக்க உதவுகின்ற சரியான முறைமையாகும்.
இந்த முறைமையே உள்வரும் வெளியேறும் விபரங்களை குறிப்பிடுவதுடன், குறைந்த பணியாளர்களுடன் கூட எல்லை முகாமைத்துவத்தை மிகவும் வினைத்திறனாக ஆக்குகின்றது. இதே போன்ற முறைமைகள் பிராந்தியத்தில் பயன்படுத்தப்படுவதுடன், அவை அனைத்தும் ஹோட்டல்கள், வாடகை கார்கள் மற்றும் பொலிஸ் வலையமைப்புகள் போன்ற நாட்டினுடைய பிற டிஜிட்டல் வலையமைப்புகளுக்குள் இணைக்கப்பட்டிருக்கவில்லை.
வெளிப்படையாக, இலங்கையின் எல்லை முகாமைத்துவமானது தீவுக்கு மட்டுமன்றி பிராந்தியத் தேவைகளுக்காகவும் நம்பகத்தன்மையுடனும் பொறுப்பானதாகவும் இருப்பதை உறுதிப்படுத்தும் வகையில் அனைத்து வருகையாளர்களும் கண்காணிக்கப்பட்டு கணக்கிடப்படும் வலையமைப்பால் செயற்படுத்தப்பட்ட அமைப்பைக் கொண்டிருப்பது காலத்தின் தேவைப்பாடாகும்.
வெளிப்படையான காரணங்களுக்காக, பிரிவினைவாத சித்தாந்தம் மற்றும் மத தீவிரவாதம் ஆகியவை உயர் முன்னுரிமைகளாக உள்ளன. இந்தக் கரிசனங்கள் தொடர்பில், இந்த நாட்டில் இத்தகைய சித்தாந்தங்களின் சாத்தியமான மறுமலர்ச்சியைத் தடுப்பதற்கும் நிறுத்துவதற்கும் ஓர் ஒருங்கிணைந்த எல்லை முகாமைத்துவ முறைமை பெறுமதியான சாதனமாக இருக்கும்.
ஒரு அடிப்படையான உதாரணமாக, ஒரு வெளிநாட்டு நாட்டில் வசிக்கும் பிரிவினைவாதத்தை ஆதரிப்பவர், ஒரு சுற்றுலாப் பயணியாக இலங்கைக்கு வருகை தந்து பின்னர் அவர் புறப்படுவதற்கு முன்னராக சமூக விரோத அல்லது திட்டமிட்ட நாசகார நடவடிக்கைகளில் ஈடுபடுவார்.
ஒருங்கிணைந்த எல்லை முகாமைத்துவம் இல்லாத நிலையில், இது மிக தாமதமாகும் வரை அத்தகைய செயற்பாடு அவதானிக்கப்படாமல் இருக்கும். வினைத்திறனான எல்லை அபாய மதிப்பீட்டு நிலையத்தில் (BRAC) நாடுகள் முதலீடு செய்வதற்கான காரணங்களை நிதியியல் அடிப்படையில் ஒருபோதும் கணக்கிட முடியாது. எல்லாவற்றிற்கும் மேலாக, நாடு பாதுகாப்பற்றதாகவும் பந்தோபஸ்து அற்றதாகவும் மாறும் போது பொதுவாக பொருளாதார அபிவிருத்தியே முதலாவது இழப்பாகும்.
வினைத்திறனான எல்லைக் கட்டுப்பாட்டு பொறிமுறைகள் வெறுமனே பாதுகாப்பு அச்சுறுத்தல்களை மட்டுமின்றி, மிகவும் பரந்த உயிரியல் பாதுகாப்பு அபாயங்களையும் நிவர்த்தி செய்கின்றன. இஸ்ரேல் "சுற்றுலாப் பயணிகள்" சம்பந்தப்பட்ட அறுகம்குடா சம்பவத்திற்குப் பிறகு, பிரபல ஊடகங்கள் பல்வேறு தொல்பொருள் தளங்களில் இந்த மக்கள் இருப்பது தொடர்பில் வெளிப்படையாக வினா எழுப்பின. 2019 இல் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்கு முன்னர் "வெறுக்கத்தக்க பேச்சுரைப்பவர்கள்" என்று அழைக்கப்படுபவர்கள் கூட சுற்றுலாப் பயணிகளாக நாட்டிற்கு வருகை தந்தனர் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்!
அடுத்த ஐந்தாண்டுகளில், நாடு தனது கடனைத் திருப்பிச் செலுத்த ஆரம்பிக்கும் சூழலில், பொருளாதாரத்தின் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் மோதல் சூழ்நிலையை இலங்கை அரசால் ஏற்றுக்கொள்ள முடியாது. அதிகரித்த முறையில் மோதல்கள் நிறைந்த உலகிற்கு இலங்கை "பாதுகாப்பான தெரிவிடமாக" மாறியதன் காரணமாக சுற்றுலா வருமானம் அதிகரித்து எங்களின் முக்கிய ஆதாரமாக தொடர்ந்து இருக்கும் போது, இலங்கை பாதுகாப்பாகவும் அனைவரையும் உள்ளடக்கியதாகவும் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
இதற்காக, சுற்றுலாப் பயணிகளாக அணிதிரண்டு மற்றைய நடவடிக்கைகளில் ஈடுபடும் வருகையாளர்கள் கடுமையாக கண்காணிக்கப்பட வேண்டும். இத்தகைய கண்காணிப்பு மற்றும் கண்காணிப்பு அமைப்புகள், ஒருமுறை நிறுவப்பட்டால், அனைத்து குடிமக்களும் வருகையாளர்களும் தாம் கோப்பிடப்படுவதுடன் நாட்டின் சட்டத்தின் ஆட்சிக்கு உட்பட்டவர்கள் என்பதை உணர்ந்து கொள்வது உட்பட ஒரு சக்திவாய்ந்த தடுப்பாக இருக்கும்.
அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு பாதுகாப்பு மற்றும் பந்தோபஸ்து சூழ்நிலை அவசியமாகும். நமது தொழிற்துறை தளம் செழிக்க வேண்டும், சுற்றுலா வர்த்தகம் தொடர்ந்து பணமீட்ட வேண்டும், தேசிய நல்லிணக்கத்திற்கு உள்ளக அரசியல் ஸ்திரத்தன்மை இருக்க வேண்டும். இது அரசாங்கத்தின் டிஜிட்டல் மயமாக்கல், ஒருங்கிணைப்பு மற்றும் முழுமையான முழு சமூக அணுகுமுறையின் முன்முயற்சிகளுக்கு ஏற்ப புத்துயிர் பெறுவதற்கும், முதலீடு செய்வதற்கும், வெற்றிகரமாக அமுல்படுத்தப்படுவதற்கும் ஒருங்கிணைந்த எல்லை முகாமைத்துவ முறைமையை முன்னெப்போதையும் விட முக்கியமானதாக ஆக்குகின்றது.
நன்றி வீரகேசரி