Seine-et-Marne : உதைபந்தாட்ட ரசிகர்களிடையே மோதல்.. இளைஞன் படுகாயம்!
11 மாசி 2025 செவ்வாய் 08:00 | பார்வைகள் : 941
உதைபந்தாட்ட ரசிகர்களுக்கிடையே இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் ஒன்றில் இளைஞன் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி படுகாயமடைந்துள்ளார்.
20 வயதுக்குட்பட்டவர்களுக்கான U20 போட்டி ஒன்று ஞாயிற்றுக்கிழமை மாலை Meaux (Seine-et-Marne) நகரில் இடம்பெற்றது. இந்த போட்டியின் போது விளையாடிய இரு அணி ரசிகர்களுக்கும் இடையே திடீரென மோதல் வெடித்தது.
ஒருவரை ஒருவர் தாக்கி மோதிக்கொண்டனர். அதன் முடிவில் இளைஞன் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டுள்ளார்.
படுகாயமடைந்த இளைஞன் உலங்குவானூர்தி மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். தாக்குதல் மேற்கொண்ட ஒருவரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.