இலங்கையில் சில பகுதிகளில் ஆரோக்கியமற்ற காற்றின் தரம்
![இலங்கையில் சில பகுதிகளில் ஆரோக்கியமற்ற காற்றின் தரம்](ptmin/uploads/news/SriLanka_renu_image_b848a101a4.jpg)
11 மாசி 2025 செவ்வாய் 09:02 | பார்வைகள் : 779
காலி மற்றும் இரத்தினபுரி ஆகிய பகுதிகளில் காற்றின் தரம் சிறிதளவு ஆரோக்கியமற்ற நிலையில் காணப்படும் என கணிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சுற்றாடல் கற்கைகள் மற்றும் சேவைகள் பிரிவு மற்றும் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் வாகன புகைப் பரீட்சை நம்பிக்கை நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,
நாடு முழுவதும் இன்று செவ்வாய்க்கிழமை காற்றின் தர சுட்டெண் 58 தொடக்கம் 108க்கு இடையில் இருக்கும்.
இது பெரும்பாலான நகரங்களில் மிதமான அளவைக் குறிப்பதோடு, காலி மற்றும் இரத்தினபுரி ஆகிய பகுதிகளில் சிறிதளவு ஆரோக்கியமற்ற நிலையை குறிக்கின்றது.
பெரும்பாலான நகரங்களில் திங்கட்கிழமை காற்றின் தர சுட்டெண் மிதமான நிலையிலும், காலி, இரத்தினபுரி, எம்பிலிப்பிட்டிய மற்றும் அம்பாந்தோட்டை ஆகிய பகுதிகளில் சிறிதளவு ஆரோக்கியமற்ற நிலையிலும் காணப்பட்டுள்ளது.
நாட்டில் அடுத்த சில நாட்களுக்கு பெரும்பாலான நகரங்களில் காற்றின் தர சுட்டெண் மிதமானதாக காணப்படும்.
அதிகமாக போக்குவரத்து நெரிசல் காணப்படும் வேளைகளில், குறிப்பாக காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை மற்றும் மாலை 1.00 மணி முதல் 2.00 மணி வரை காற்றின் தரச் சுட்டெண் ஆரோக்கியமற்று காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
![](/images/engadapodiyalxy.jpg)