உக்ரைனிய தலைநகர் மீது ரஷ்ய படைகள் அடுத்தடுத்த தாக்குதல்…!

12 மாசி 2025 புதன் 09:30 | பார்வைகள் : 3575
உக்ரைனிய தலைநகர் கீவ் மீது ரஷ்ய படைகள் அடுத்தடுத்த ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளனர்.
கீவ் நகரில் இன்று அதிகாலை ரஷ்ய ஏவுகணை நடத்திய தாக்குதலில் ஒருவர் உயிரிழந்ததுடன் குழந்தை உட்பட பலர் காயமடைந்துள்ளனர்.
உக்ரைன் தலைநகரின் பல மாவட்டங்களில் தீ விபத்துகள் ஏற்பட்டு குடியிருப்பு மற்றும் குடியிருப்பு அல்லாத கட்டிடங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.
கீவ் நகர மேயர் விட்டாலி கிளிட்ச்கோ(Vitali Klitschko), தாக்குதலில் ஒன்பது வயது குழந்தை உட்பட பலர் காயமடைந்ததை உறுதிப்படுத்தினார்.
நகரின் குறைந்தது நான்கு மாவட்டங்கள் இலக்கு வைக்கப்பட்டன. அவசரகால சேவைகள் சம்பவ இடத்தில் தீயை அணைத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்து வருகின்றன.
உக்ரைனின் மாநில அவசர கால சேவை, உயிரிழப்பு Obolonsky மாவட்டத்தில் நடந்ததாக தெரிவித்துள்ளது.
இரண்டு அலுவலக கட்டிடங்கள் அழிக்கப்பட்டன. அவற்றில் ஒன்று தீப்பிடித்து எரிந்ததாகவும் கூறப்படுகிறது.
ரஷ்யாவின் இந்த தாக்குதல் உள்ளூர் நேரப்படி அதிகாலை 4:30 மணியளவில் தொடங்கியது.
இதனால் உக்ரைனிய நகரம் முழுவதும் வான்வழித் தாக்குதல் எச்சரிக்கைகள் ஒலித்ததாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025