Paristamil Navigation Paristamil advert login

காதலர் தினத்துக்கு முன் 7 நாட்கள் கொண்டாடப்படும் காதலர் வாரம்

காதலர் தினத்துக்கு முன் 7 நாட்கள் கொண்டாடப்படும் காதலர் வாரம்

12 மாசி 2025 புதன் 09:40 | பார்வைகள் : 247


இந்த காதலர் வாரம் ஒவ்வொரு நாளும் காதலை வெளிப்படுத்தும் வகையில் கொண்டாடப்படுகிறது. நீங்கள் புதிதாக காதலில் விழுந்திருந்தால், இந்த ஆண்டு உங்கள் துணையுடன் காதலர் தினத்துடன், காதலர் வாரத்தையும் சிறப்பாக கொண்டாட விரும்பினால், காதலர் வாரத்தின் ஒவ்வொரு நாளும் எப்படி கொண்டாடப்படுகிறது என்பதை அறிந்து உங்கள் துணையுடன் சந்தோஷமாக கொண்டாடுங்கள்.

பிப்ரவரி 07: ரோஸ் டே
 காதலர் வாரத்தின் முதல் நாளில் கொண்டாடப்படுவது ரோஜா தினம். இந்த நாளில் காதலர்கள் தங்கள் துணைக்கு காதலின் சின்னமாக கருதப்படும் ரோஜாக்களை கொடுத்து, தங்கள் அன்பை, உணர்வுகளை வெளிப்படுத்துவார்கள். ரோஜாக்களின் ஒவ்வொரு நிறங்களும் ஒவ்வொரு அர்த்தத்தையும், உணர்ச்சிகளையும் கொண்டுள்ளன.
வெள்ளை - புதிய தொடக்கங்கள், நல்லிணக்கம் அல்லது தூய்மையைக் குறிக்கிறது.
மஞ்சள் - நட்பைக் குறிக்கிறது.
சிவப்பு - அன்பைக் குறிக்கிறது.
பிங்க் - பக்தியையும், மகிழ்ச்சியையும் குறிக்கிறது.

பிப்ரவரி 08 - ப்ரொபோஸ் டே
காதலர் வாரத்தின் இரண்டாம் நாளில் கொண்டாடப்படுவது ப்ரொபோஸ் டே என்னும் முன்மொழிவு தினம். இந்நாளில் காதலர்கள் தங்கள் துணையுடன் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவார்கள். சிலர் இந்நாளில் காதலை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்லும் திருமண முன்மொழிவுகளையும் வெளிப்படுத்துவார்கள். எனவே உங்கள் காதலை வித்தியாசமாக வெளிப்படுத்த நினைத்தாலோ அல்லது திருமணம் செய்து கொள்ள விரும்பினாலோ, அதை இந்நாளில் புதுமையான முறையில் வெளிப்படுத்துங்கள்.

பிப்ரவரி 9- சாக்லேட் டே
காதலர் வாரத்தின் மூன்றாம் நாளில் சாக்லேட் தினம் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் காதல் தரும் மகிழ்ச்சியை நினைவுகூறும் வகையில் காதலிப்பவர்கள் சாக்லேட்டுகளை பரிமாறிக் கொள்வார்கள். இது வெறும் இனிப்புக்களை பரிமாறிக் கொள்வதை விட, உறவை வளப்படுத்தி இனிமையாக்குவதற்கான விருப்பத்தை பிரதிபலிக்கிறது.

பிப்ரவரி 10 - டெடி டே
காதலர் தினத்தின் நான்காவது நாளில் கொண்டாடப்படுவது அரவணைப்பு மற்றும் பாசத்தை பிரதிபலிக்கும் டெடி தினம். இந்நாள் மென்மையான டெடி பொம்மைகளை பரிசளிப்பதன் மூலம் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் எப்பேற்பட்ட சூழ்நிலையிலும் "நான் உனக்காக இருக்கிறேன்" என்பதை வெளிப்படுத்தும் வகையில் ஒரு டெடி பொம்மையை பரிசரிக்கலாம்.

பிப்ரவரி 11 - ப்ராமிஸ் டே
காதலர் தினத்தின் ஐந்தாவது நாளில் கொண்டாடப்படுவது ப்ராமிஸ் டே என்னும் வாக்குறுதி தினம். இந்நாளில் அன்பு, விசுவாசம் மற்றும் ஆதரவின் வாக்குறுதிகள் மூலம் காதலர்கள் தங்கள் பிணைப்பை அதிகரிக்கிறார்கள். எனவே இந்த தினமானது உறவில் நம்பிக்கையையும் புரிதலையும் ஏற்படுத்த உதவுகிறது. எனவே நீங்கள் அன்பு மற்றும் நம்பிக்கையின் இதயப்பூர்வமான வாக்குறுதிகளை அளிப்பதன் மூலம் உங்கள் பிணைப்பை வலுப்படுத்துங்கள்.

பிப்ரவரி 12 - ஹக் டே
காதலர் தினத்தின் 6 ஆவது நாளில் கொண்டாடப்படுவது ஹக் தினம். இந்நாளில் அன்பான அரவணைப்பு வார்த்தைகள் இல்லாமல் அன்பு, ஆறுதல் மற்றும் அக்கறையை வெளிப்படுத்தும். எனவே நீங்கள் உங்கள் துணையுடன் ஏதாவது சண்டை போட்டிருந்தால், அதற்கு முற்றுப்புள்ளி வைக்க நினைத்தால், இந்நாளில் ஒரு காதல் நிறைந்த அரவணைப்பை கொடுங்கள்.

பிப்ரவரி 13 - கிஸ் டே காதலர் தினத்தின் 7 ஆவது நாளில் கொண்டாடப்படுவது கிஸ் டே என்னும் முத்த தினம். காதலர் தினத்திற்கு முந்தைய தினம் கொண்டாடப்படும் இந்நாளில், காதலர்கள் ஒரு அன்பான முத்தத்துடன் காதலையும், பாசத்தையும் பகிர்ந்து கொள்வார்கள்.

பிப்ரவரி 14 - காதலர் தினம்
காதலர் வாரத்தின் கடைசி தினம் கொண்டாடப்படுவது தான் காதலர் தினம். இந்நாள் அன்பு மற்றும் பாசத்தின் அடையாளமாகும். இந்நாளில் காதலிப்பவர்கள் தங்கள் துணைக்கு பலவிதமான மறக்க முடியாத மற்றும் உணர்ச்சிவசப்படும் வகையிலான பல பொருட்களை பரிசளித்து, தங்கள் காதலை வெளிப்படுத்துவார்கள்.

 

 

 



Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்