அர்ச்சுனா எம்.பியால் தாக்கப்பட்ட ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி!
12 மாசி 2025 புதன் 09:41 | பார்வைகள் : 4302
யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவினால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும், ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்திலுள்ள விருந்தகம் ஒன்றில் நாடாளுமன்ற உறுப்பினருக்கும் தமக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக, தாக்குதலுக்கு இலக்கானதாக கூறப்படும் நபர் முறைப்பாடளித்துள்ளாார்.
இதேவேளை, இந்த விடயம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா கூறுகையில், நேற்றிரவு விருந்தகம் ஒன்றில் தாமும் தமது பிரத்தியேக செயலாளரும் உணவருந்திக் கொண்டிருந்தபோது, இருவர் தம்முடன் முரண்பட்டதாகத் தெரிவித்தார்.
தையிட்டி விகாரை இடிக்கப்படக்கூடாது என தாம் தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துக் குறித்த இருவரும் தம்முடன் முரண்பட்டதாகவும் அதனை காணொளியாக பதிவுசெய்ய முற்பட்டபோது, அவர்கள் தம்மைத் தாக்கியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தற்பாதுகாப்புக்காகத் தாமும் அவர்களில் ஒருவரைத் தாக்கியதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா தெரிவித்தார்.
இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனாவினால் தாக்கப்பட்டதாகக் கூறி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நபருக்கு நெற்றிப்பகுதியில் வெட்டுக்காயம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்தார்.
இந்தநிலையில், இரு தரப்பினரிடமிருந்தும் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அதனடிப்படையில் தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
6 நாள்கள் முன்னர்
நினைவஞ்சலி
RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025

























Bons Plans
Annuaire
Scan