நெடுஞ்சாலையின் பாலத்திலிருந்து கீழே விழுந்த பேருந்து -குவாத்தமாலாவில் 60 பேர் பலி
12 மாசி 2025 புதன் 10:23 | பார்வைகள் : 4938
நெடுஞ்சாலையின் பாலத்திலிருந்து பேருந்து கீழே விழுந்த விபத்தில் குவாத்தமாலாவில் 60 பேர் உயிரிழந்துள்ளனர்.
பல பயணிகள் பேருந்தின் சிதைவுகளிற்குள் சிக்குண்டுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
70க்கும் அதிகமானவர்களுடன் சான் அகஸ்டின் நகரிலிருந்து தலைநகரை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த பேருந்து நெடுஞ்சாலையின் பாலத்திலிருந்து கீழே விழுந்துள்ளது.
53 பேர் அந்த இடத்திலேயே உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ள அதிகாரிகள் மேலும்சிலர் மருத்துவமனையில் உயிரிழந்தனர் என குறிப்பிட்டுள்ளனர்.
கழிவுநீர் பகுதியில் பேருந்து காணப்படுவதையும் அருகில் உடல்கள் காணப்படுவதையும் காண்பிக்கும் படங்கள் வெளியாகியுள்ளன.
சாரதி பேருந்தின் கட்டுப்பாட்டை இழந்தார் பேருந்து சிறிய வாகனங்களுடன் மோதிய பின்னர் பாலத்திலிருந்து கீழே விழுந்தது என தகவல்கள் வெளியாகியுள்ளன.


























Bons Plans
Annuaire
Scan