அரசாங்கம் மீது ஐந்தாவது நம்பிக்கை இல்லா பிரேரணை!
![அரசாங்கம் மீது ஐந்தாவது நம்பிக்கை இல்லா பிரேரணை!](ptmin/uploads/news/France_rajeevan_GjkbXwcW8AE5vai.jpg)
12 மாசி 2025 புதன் 13:58 | பார்வைகள் : 759
பிரதமர் பிரான்சுவா பெய்ரூவின் அரசாங்கம் மீது கொண்டுவரப்பட்ட ஐந்தாவது நம்பிக்கை இல்லா பிரேரணை, இன்று புதன்கிழமை மாலை வாக்கெடுப்புக்கு வருகிறது.
La France Insoumise கட்சி இந்த அரசாங்கத்தை கவிழ்க்கும் முயற்சியில் மிக தீவிரமாக இருக்கிறது. இதுவரை நான்கு நம்பிக்கை இல்லா பிரேரணையை கொண்டுவந்ததை அடுத்து, ஐந்தாவது தடவையாக மீண்டும் அதனை கொண்டுவந்துள்ளது. இன்று புதன்கிழமை மாலை அது வாக்கெடுப்புக்கு வரும் என தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை, இந்த பிரேரணைக்கு ஆதரவாக எதிர்கட்சி இருக்கைகளில் அமர்ந்திருக்கும் PS மற்றும் RN கட்சியினர் ஆதரவு தெரிவிக்கவில்லை. எனவே பிரேரணை நிறைவேற்ற தேவையான 289 வாக்குகள் பெறுவதில் சிக்கல் உள்ளதாகவும், முந்தைய பிரேரணைகளைப் போல இது தோல்வியில் முடியும் எனவும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
![](/images/engadapodiyalxy.jpg)