இலங்கையில் மின்வெட்டு தொடர்பில் நாளை மீண்டும் தீர்மானம்!
![இலங்கையில் மின்வெட்டு தொடர்பில் நாளை மீண்டும் தீர்மானம்!](ptmin/uploads/news/SriLanka_renu_New-Project-138-750x375.jpg)
12 மாசி 2025 புதன் 15:39 | பார்வைகள் : 169
இலங்கையில் நாளை மின்வெட்டு அமுல்படுத்தப்படுமா என்பது தொடர்பில் நாளை காலை அறிக்கை வெளியிடவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
நுரைச்சோலை அனல்மின் நிலையத்தை புனரமைக்கும் பணிகள் தற்போது இடம்பெற்று வரும் நிலையில், மேலும் மின்வெட்டு அமுல்படுத்தப்படுமா இல்லையா என்பது தொடர்பில் இறுதித் தீர்மானம் இதன்போது எட்டப்படும் என CEB இன் பேச்சாளர் தம்மிக்க விமலரதன குறிப்பிட்டுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை (09) நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின்தடையை மீட்டெடுக்கும் வேளையில், நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட பிரச்சினையின் விளைவாக திங்கட்கிழமை (10), செவ்வாய் (11) ஆகிய இரு தினங்களில் நாடளாவிய ரீதியில் சுழற்சி மின்வெட்டை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதன்படி, பிற்பகல் 03.30 மணி தொடக்கம் இரவு 09.30 மணி வரையான காலப் பகுதியில் சுழற்சி முறையில் நாடளாவிய ரீதியில் ஒவ்வொரு பகுதிகளிலும் 90 நிமிட மின்வெட்டினை அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டது.
எவ்வாறாயினும், கிடைக்கக்கூடிய உற்பத்தித் திறனுடன் பெளர்ணமி தின குறைந்த தேவையை பூர்த்தி செய்ய முடியும் என்பதால் இன்று (12) மின்வெட்டு இடம்பெறாது என இலங்கை மின்சார சபை நேற்று உறுதிபடுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
![](/images/engadapodiyalxy.jpg)