3 பில்லியன் யூரோக்கள் நிதியில்... இலத்திரனியல் மகிழுந்துகளுக்கான மின்னேற்றி நிலையங்கள்...!!
![3 பில்லியன் யூரோக்கள் நிதியில்... இலத்திரனியல் மகிழுந்துகளுக்கான மின்னேற்றி நிலையங்கள்...!!](ptmin/uploads/news/France_rajeevan_GjpMdh9WoAAaEoN.jpg)
13 மாசி 2025 வியாழன் 10:00 | பார்வைகள் : 1247
மின்சாரத்தில் இயங்கும் இலத்திரனியல் மகிழுந்துகளை வேகமாக மின்னேற்றக்கூடிய நவீன நிலையங்களை அமைக்க அரசு 3 பில்லியன் யூரோக்களை ஒதுக்கியுள்ளது.
மொத்தமாக 10,000 நிலையங்களை நாடு முழுவதும் அமைக்க Ionity, Fastned, Electra, Engie Vianeo உள்ளிட்ட 13 நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் (2028 இறுதிக்குள்) இந்த நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.
மிக வேகமாக மின்னேற்றக்கூடிய நவீன தொழில்நுட்பங்கள் கொண்ட நிலையங்களாக அவை இருக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
![](/images/engadapodiyalxy.jpg)