■ சென் நதிக்கு குடியுரிமை!
![■ சென் நதிக்கு குடியுரிமை!](ptmin/uploads/news/France_rajeevan_IMG-20250213-WA0060.jpg)
13 மாசி 2025 வியாழன் 10:43 | பார்வைகள் : 1165
சென் நதிக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. பிரெஞ்சு குடியுரிமை கொண்ட நபர் ஒருவர் போன்று இனிமேல் சென் நதியும் மதிக்கப்படுதல் வேண்டும்.
பரிசில் மனித காலடி படும் முன்னர் சென் நதி தோன்றியது. பரிசின் நீண்டகால அடையாளமாக இதுக்கும் சென் நதிக்கு 'கெளரவ குடியுரிமை' (honneur de la ville) வழங்கப்பட்டுள்ளது. நேற்று ஜனவரி 12, புதன்கிழமை இதனை பரிஸ் நகரசபை அறிவித்துள்ளது.
"அழகிய சென் நதியை நாம் பாதுகாக்க வேண்டும்! அதனை சக மனிதன் போல் மதிக்க வேண்டும்" என பரிஸ் நகர முதல்வர் ஆன் இதால்கோ அறிவித்துள்ளார்.
![](/images/engadapodiyalxy.jpg)