உயர்நீதிமன்றத்தில் இளையராஜா ஆஜார்.
![உயர்நீதிமன்றத்தில் இளையராஜா ஆஜார்.](ptmin/uploads/news/Cinema_tharshi_raja.jpg)
13 மாசி 2025 வியாழன் 14:24 | பார்வைகள் : 277
தேவர் மகன், குணா உள்பட 109 திரைப்படங்களுக்கான பாடல் உரிமை தொடர்பான வழக்கில் சாட்சியக் அளிப்பதற்காக இசையமைப்பாளர் இளையராஜா சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றத்தில் இன்று ஆஜராகி இருக்கிறார்.
யூடியூப் மற்றும் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டிருக்கிற தேவர் மகன் குணா உள்பட 109 படங்களில் பாடல்கள் உரிமை தொடர்பான வழக்கு சென்னை விருது மன்றத்தில் நடைபெற்று வருகிறது.
தன்னிடம் அனுமதி இல்லாமல் அந்த பாடல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதற்காக சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் காப்பீட்டு தொகை அளித்திருக்க வேண்டும் என்று கோரி இந்த வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றத்தில் சாட்சிகள் விசாரணைக்காக உயர்நீதிமன்றம் அனுப்பியது. அதன் அடிப்படையில் இன்று சாட்சிகள் விசாரணை நடைபெறுகிறது. இந்த காட்சிகள் விசாரணைக்காக உயர் நீதிமன்ற வளாத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா தற்போது வந்திருக்கிறார். அவரிடம் தற்போது சாட்சிகள் விசாரணை நடைபெறுகிறது, மேலும் இன்றே குறுக்கு விசாரணையும் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
![](/images/engadapodiyalxy.jpg)