Paristamil Navigation Paristamil advert login

மஹிந்தவின் மகனுக்கு எதிராகச் சட்டமா அதிபர் குற்றப்பத்திரிகை தாக்கல்!

மஹிந்தவின் மகனுக்கு எதிராகச் சட்டமா அதிபர் குற்றப்பத்திரிகை தாக்கல்!

14 மாசி 2025 வெள்ளி 12:38 | பார்வைகள் : 635


முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டி டேசி போரஸ்ட் விக்ரமசிங்க ஆகியோருக்கு எதிராகச் சட்டமா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றப்பத்திரிகைகளைத் தாக்கல் செய்துள்ளார்.

2012 மற்றும் 2015க்கு இடையில், ரத்மலான சிரிமல் வத்த உயன மற்றும் தெஹிவளை பகுதிகளில் 80 மில்லியன் ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள காணிகளையும் சொத்துக்களையும் கையகப்படுத்திய விதத்தை வெளியிடத் தவறியதற்காகச் சட்டமா அதிபர் இந்த பிரதிவாதிகளுக்கு எதிராகக் குற்றச்சாட்டுகளைத் தாக்கல் செய்துள்ளார்.

பணம் சம்பாதித்த விதத்தை வெளியிடத் தவறியதன் மூலம் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் இழைக்கப்பட்டுள்ளதாகக் கூறி, சட்டமா அதிபர் இந்தக் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தார்.

இந்த சம்பவம் தொடர்பாகச் சமீபத்தில் கைது செய்யப்பட்ட யோஷித ராஜபக்ஷ, கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்