கடுமையான நிபந்தனைகளுடன் புடினை சந்திக்க ஜெலென்ஸ்கி தயார்…!

15 மாசி 2025 சனி 06:57 | பார்வைகள் : 2766
ரஷ்ய ஜனாதிபதி புடினை சந்திக்க தயார் என்று உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
ரஷ்ய ஜனாதிபதி புடினை நிபந்தனைகளுடன் சந்திக்கத் தயார் என்று உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
அதே சமயம் உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி புடினைத் தவிர மற்ற ரஷ்ய அதிகாரிகளைச் சந்திக்க திட்டமிடவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறிய தகவலில், "நான் ரஷ்யர்களைச் சந்திக்க மாட்டேன், அது எனது திட்டத்தில் இல்லை. நான் ஒரே ஒரு ரஷ்யரை மட்டுமே-அதாவது புடினை மட்டுமே சந்திப்பேன்.
அதுவும் டிரம்ப் மற்றும் ஐரோப்பாவுடன் இரு நாடுகளுக்கான பொதுவான திட்டம் உருவான பிறகே, புடினுடன் அமர்ந்து போரை முடிவுக்கு கொண்டு வருவோம் என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்த விஷயத்தில் மட்டும் அவரைச் சந்திக்க தயாராக இருக்கிறேன்," என்றும் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
முன்னதாக, ரஷ்ய மற்றும் உக்ரைன் பிரதிநிதிகள் சவுதி அரேபியாவில் சந்திக்கலாம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பரிந்துரைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.