Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

ஆஸ்திரியாவில் கத்திக்குத்து தாக்குதல் - 14 வயது சிறுவன் பலி

ஆஸ்திரியாவில் கத்திக்குத்து தாக்குதல்  -  14 வயது சிறுவன் பலி

16 மாசி 2025 ஞாயிறு 08:22 | பார்வைகள் : 10169


ஆஸ்திரியாவின்  தென்பகுதி நகரமொன்றில் நபர்  கத்திக்குத்து தாக்குதலில் 14 வயது சிறுவன் கொல்லப்பட்டுள்ளான்.

ஆஸ்திரியாவில்  வசிப்பதற்கு சட்டபூர்வமான அனுமதியை பெற்ற சிரியாவை சேர்ந்தவர் மேற்கொண்ட கத்திக்குத்து தாக்குதலில் ஐவர் படுகாயமடைந்துள்ளனர்.

விலாச் என்ற நகரில் 23 வயது நபர் கத்திக்குத்து தாக்குதலில் ஈடுபட்டுள்ளார்.

இதனை பார்த்த வாகனச்சாரதி அந்த நபர் மீது வாகனத்தை செலுத்தி அவரை தடுத்து நிறுத்தியுள்ளார்.

ஆஸ்திரியாவில்  வசிப்பதற்கு சட்டபூர்வமான அனுமதியை பெற்ற சிரியாவை சேர்ந்தவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என அவுஸ்திரிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தாக்குதலை நடப்பதை உணவு விநியோகிப்பவர் ஒருவர் பார்த்துள்ளார் அவர் தனது வாகனத்தை சந்தேகநபரை நோக்கி செலுத்தியுள்ளார் இதன் காரணமாக மேலும் பலர் உயிரிழப்பது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

14 முதல் 32 வயதானவர்கள் காயமடைந்துள்ளனர். வன்முறைக்கான காரணம் குறித்த விபரங்கள் வெளியாகவில்லை.சந்தேநகநபரின் நோக்கம் குறித்து விசாரணைகைள மேற்கொண்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வாரஇறுதியில் இடம்பெற்ற இந்த தாக்குதல் இத்தாலி ஸலொவேனியா எல்லையில் உள்ள இந்த நகரத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

  ஆஸ்திரியாவில்இவ்வாறான தாக்குதல்கள் இடம்பெறுவது குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

2020 ம் ஆண்டு ஜிகாத் உறுப்பினர் ஒருவர் மேற்கொண்ட தாக்குதலில் நால்வர் கொல்லப்பட்டனர்.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்