சாம்பியன்ஸ் டிராஃபியில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரர்கள்

16 மாசி 2025 ஞாயிறு 08:28 | பார்வைகள் : 877
சாம்பியன்ஸ் டிராஃபியில் தொடங்க உள்ள நிலையில் இதுவரை அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் குறித்து பார்ப்போம்.
நியூசிலாந்தின் கைல் மில்ஸ் இந்தப் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். 15 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 28 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.
இரண்டாவது இடத்தில் உள்ள இலங்கை வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா (Lasith Malinga) 25 விக்கெட்டுகளை (16 போட்டிகள்) வீழ்த்தியுள்ளார்.
அடுத்த இடத்திலும் இலங்கை வீரர்தான் உள்ளார். அவர்தான் சுழற்பந்து ஜாம்பவான் முத்தையா முரளிதரன். 17 போட்டிகளில் விளையாடியுள்ள முரளிதரன் 24 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.
அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள்
• கைல் மில்ஸ் - 28 லசித்
• மலிங்கா - 25
• முத்தையா முரளிதரன் - 24
• பிரெட் லீ - 22
• க்ளென் மெக்ராத் - 21
• ஜேம்ஸ் ஆண்டர்சன் - 21
• ஜேக் கல்லிஸ் - 20
• மெர்வின் தில்லோன் - 19
• சமிந்தா வாஸ் - 18
• டேனியல் விக்டோரி - 18