■ பரிசில் இடம்பெற உள்ள - ஐரோப்பிய பாதுகாப்பு மாநாடு..!

16 மாசி 2025 ஞாயிறு 14:35 | பார்வைகள் : 1595
ஐரோப்பிய பாதுகாப்பு உச்சிமாநாடு பிரான்ஸ் தலைநகர் பரிசில் இடம்பெற உள்ளது. பல ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள், வெளியுறவுத்துறை அமைச்சர்கள் இதில் பங்கேற்க உள்ளனர்.
பெப்ரவரி 17, நாளை திங்கட்கிழமை இந்த மாநாடு ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தலைமையில் இடம்பெற உள்ளது. பிரெஞ்சு வெளியுறவுத்துறை அமைச்சர் Jean-Noël Barrot, இன்று ஞாயிற்றுக்கிழமை இதனை அறிவித்தார்.
இந்த மாநாட்டில் மிக முக்கியமாக உக்ரேன் தொடர்பிலும் அதன் பாதுகாப்பு தொடர்பிலும் கலந்துரையாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.