Saint-Denis : காவல்துறையினரின் மகிழுந்து மீது தாக்குதல்!

16 மாசி 2025 ஞாயிறு 12:57 | பார்வைகள் : 2442
காவல்துறையினரின் மகிழுந்து ஒன்றின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. Saint-Denis நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பெப்ரவரி 14, வெள்ளிக்கிழமை காதலர் தின இரவில் இந்த தாக்குதல் இரவு 8 மணி அளவில் இடம்பெற்றுள்ளது. கண்காணிப்பு கடமையில் ஈடுபட்டுள்ள காவல்துறையினரின் மகிழுந்தினை சூழ்ந்துகொண்ட சிலர், திடீரென மகிழுதை தாக்க ஆரம்பித்தனர்.
காவல்துறையினர் மகிழுந்துக்குள் இருந்தபோதும், அதிஷ்டவசமாக இச்சம்பவத்தில் அவர்கள் காயமடையவில்லை.
தாக்குதல் மேற்கொண்டவர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.