Aubervilliers : மூன்றாவது தளத்தில் இருந்து விழுந்து - ஒருவர் பலி!!

16 மாசி 2025 ஞாயிறு 16:00 | பார்வைகள் : 2413
மூன்றாவது தளத்தில் இருந்து ஊழியர் ஒருவர் தவறி விழுந்து பலியாகியுள்ளார். Aubervilliers (Seine-Saint-Denis) நகரில் இச்சம்பவம் நேற்று பெப்ரவரி 15, சனிக்கிழமை மாலை இடம்பெற்றது.
அங்குள்ள கட்டுமானப்பணி இடம்பெறும் கட்டிடம் ஒன்றில் சாரக்கட்டில் நின்று வேலை பார்த்துக்கொண்டிருந்த ஊழியர் ஒருவர் தவறி விழுந்துள்ளார். மூன்றாவது தளத்தில் இருந்து விழுந்த அவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் போர்ச்சுக்கல் குடியுரிமை கொண்டவர் என தெரிவிக்கப்படுகிறது.
அவர் CGT தொழிற்சங்க ஊழியர் என தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகள் மேற்கொண்டுவருகின்றனர்.