Val-de-Marne : காவல்துறையினரின் துப்பாக்கிச்சூட்டில் ஆயுததாரி படுகாயம்!!

16 மாசி 2025 ஞாயிறு 19:17 | பார்வைகள் : 2116
காவல்துறையினர் மீது தாக்குதல் மேற்கொள்ள முற்பட்ட ஒருவர், காவல்துறையினரால் சுடப்பட்டார். Vitry-sur-Seine (Val-de-Marne) நகரில் இச்சம்பவம் இன்று பெப்ரவரி 16, ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றது.
மாலை 5.30 மணி அளவில் நபர் ஒருவர் இரு கைகளிலும் இரு கத்திகளை வைத்துக்கொண்டு வீதியில் செல்வதை காவல்துறை வீரர் ஒருவர் பார்த்துள்ளார். அதை அடுத்து குறித்த நபரை தடுத்து நிறுத்த முற்பட்டார். அதன்போது காவல்துறை வீரரை அவர் தாக்க முற்பட்டுள்ளார்.
அதை அடுத்து, குறித்த வீரர் அவரை இரு தடவைகள் துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் குறித்த நபர் படுகாயமடைந்தார். அவர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார்.