Paristamil Navigation Paristamil advert login

காளானைக் கொண்டு பேட்டரியை உருவாக்கிய விஞ்ஞானிகள்!

காளானைக் கொண்டு பேட்டரியை உருவாக்கிய விஞ்ஞானிகள்!

18 மாசி 2025 செவ்வாய் 08:47 | பார்வைகள் : 299


காளான்களைப் பயன்படுத்தி ஒரு மக்கும் பேட்டரியை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

சுவிட்சர்லாந்தில் உள்ள எம்பா (Empa) அறிவியல் ஆய்வு நிறுவனத்தின் விஞ்ஞானிகள், உயிரியல் முறையில் தானாகவே கரையக்கூடிய பசுமையான காளான் பேட்டரியை (mushroom battery) உருவாக்கியுள்ளனர்.

இந்த புதிய கண்டுபிடிப்பு சிறிய சென்சார்கள் மற்றும் வெப்பநிலை கண்காணிப்பான்களை இயக்க பயன்படும்.

Living battery என விஞ்ஞானிகளால் அழைக்கப்படும் இந்த பேட்டரி, செயல்பட்டு முடிந்ததும் நச்சுத்தன்மை இல்லாமல் இயற்கையாகவே கரையக்கூடும்.

- வைட் ராட் பூஞ்சை (white rot fungus) கத்தோடாக செயல்பட்டு வெளியேறும் எலக்ட்ரான்களை பிடித்துக்கொள்கிறது.

- 3D பிரிண்டர் மூலம் சிறப்பு மை கொண்டு இந்த பேட்டரி வடிவமைக்கப்படுகிறது.

- நீர் மற்றும் சில நியூட்ரியன்களை சேர்த்தால் பேட்டரி இயக்கம் தொடங்கும்.

•    முழுமையாக உயிரணுக்களால் செயல்படும் முதல் எரிபொருள் செல்லாக இது அமைந்துள்ளது.
 
•    சுற்றுச்சூழல் மாசுபாடு இல்லாத பசுமையான எரிசக்தி வழியை இது திறக்கிறது.

•    முடிவில் தானாகவே கரைந்து சுற்றுச்சூழலை பாதிக்காமல் மறைந்து விடுகிறது.

மதிப்புமிக்க இந்த கண்டுபிடிப்பை மேலும் மேம்படுத்த, பேட்டரியின் ஆயுள் மற்றும் மின்னோட்ட திறனை அதிகரிக்க விஞ்ஞானிகள் தற்போது பணியாற்றி வருகின்றனர்.  

 

வர்த்தக‌ விளம்பரங்கள்