இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

18 மாசி 2025 செவ்வாய் 09:01 | பார்வைகள் : 1440
இலங்கை முழுவதும் வெப்பமான வானிலை நிலவுவதால் பொது மக்கள அவதானத்துடன் செயல்பட வேண்டும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
என்றாலும், காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது.
ஊவா மாகாணத்திலும், அம்பாறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இலங்கையின் பிற பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவும். மேற்கு, சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும், காலி, மாத்தறை மற்றும் பதுளை மாவட்டங்களிலும் காலை வேளையில் மூடுபனியுடன் கூடிய வானிலை எதிர்பார்க்கப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது.
எனவே, வறண்ட வானிலை நிலவும் பகுதிகளில் பொது மக்கள் அதிலிருந்து தம்மை பாதுகாத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.