அமெரிக்காவில் எலான் மஸ்கிற்கு எதிராக வெடித்த போராட்டம்

18 மாசி 2025 செவ்வாய் 10:50 | பார்வைகள் : 1399
அதிபராக பொறுப்பேற்றது முதல் டிரம்ப் எடுத்த நடவடிக்கைகளுக்கு எதிராகவும், எலான் மஸ்கிற்கு அதிக அதிகாரங்கள் வழங்கியதை கண்டித்தும் ஆயிரக்கணக்கான மக்கள் திடீரென சாலையில் இறங்கி, கோஷமிட்டு பதாகைகள் ஏந்தி தங்களின் எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர்.
தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்று அதிபராகியுள்ள நிலையில், உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க்கிற்கு தனியாக ஒரு துறை அமைக்கப்பட்டு, அதன் பொறுப்பாளராக அவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே எலான் மஸ்க் சில அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
குறிப்பாக அமெரிக்க மக்களின் வரிப்பணம் வீணாவதை தடுக்க, பல நாடுகளுக்கு கொடுக்கப்பட்டு வரும் நிதிகளை நிறுத்தி வருகிறார்.
இந்நிலையில் அமெரிக்கா அதிபருக்கு எதிராக திடீரென தலைநகர் வாஷிங்டனில் உள்ள நாடாளுமன்ற வளாகம் வெளியே பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.