Bagnolet : பெண் ஒருவர் மீது கத்திக்குத்து!!

18 மாசி 2025 செவ்வாய் 12:37 | பார்வைகள் : 1387
பெண் ஒருவர் வீதியில் வைத்து கத்தியினால் தாக்கப்பட்டுள்ளார்.
Bagnolet (Seine-Saint-Denis) நகரில் இச்சம்பவம் நேற்று திங்கட்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.
பெப்ரவரி 17, திங்கட்கிழமை இரவு 8.40 மணி அளவில் அவசர இலக்கத்துக்கு கிடைத்த தகவலை அடுத்து, அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பெண் ஒருவர் வீதியில் கத்திக்குத்துக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில், வீதியில் கிடந்துள்ளார்.
உடனடியாக அவரை மீட்ட தீயணைப்பு படையினர், மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
தாக்குதலாளி கண்காணிப்பு கமரா மூலம் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டார். அவரது நோக்கம் குறித்து அறிய முடியவில்லை.
அத்தோடு, தாக்குதலுக்கு இலக்கான பெண்ணின் சகோதர ஒருவர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார்.