Paristamil Navigation Paristamil advert login

இஸ்லாம் மதம் மீதான தாக்குதல்கள் அதிகரிப்பு!

இஸ்லாம் மதம் மீதான தாக்குதல்கள் அதிகரிப்பு!

18 மாசி 2025 செவ்வாய் 16:33 | பார்வைகள் : 1908


பிரான்சில் கடந்த 2024 ஆம் ஆண்டு இஸ்லாம் மதம் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாக உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

இஸ்லாம் மதம் மீது 2023 ஆம் ஆண்டு 173 தாக்குதல்கள் பதிவாகியுள்ளன. 2023 ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை 29% சதவீதம் அதிகமாகும்.

“சென்ற ஆண்டு 173 இஸ்லாமிய எதிர்ப்பு தாக்குதல்கள் பதிவாகியுள்ளன. இந்த எண்ணிக்கை மிகையானது. தாக்குதலுக்கு இலக்கான அனைவரும் புகார் அளிக்க வேண்டியதில்லை. எனவே மொத்த தாக்குதல்கள் இதனை விட அதிகமாக இருக்கலாம்!” என உள்துறை அமைச்சர் Bruno Retailleau இன்று பெப்ரவரி 18, செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

மதங்கள் மீதான தாக்குதல்களை எப்போதும் பிரான்ஸ் அங்கீகரிக்காது. கடுமையான தண்டனைக்குரிய குற்றமாகவே அது இருக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்