உக்ரேன் யுத்தம் : இன்று பரிசில் - மற்றுமொரு அவசர சந்திப்பு!

19 மாசி 2025 புதன் 07:00 | பார்வைகள் : 1119
திங்கட்கிழமை இடம்பெற்ற மாநாட்டை அடுத்து, இன்று பெப்ரவரி 19, புதன்கிழமை மற்றுமொரு அவசர சந்திப்பு பரிசில் இடம்பெற உள்ளது.
ஐரோப்பிய பாதுகாப்பு தொடர்பான மாநாடு திங்கட்கிழமை இடம்பெற்றிருந்தது. அதில் உக்ரேனின் பாதுகாப்பு தொடர்பில் கலந்துரையாடப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று இடம்பெற உள்ள சந்திப்பிலும் பல ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் ஐரோப்பா அல்லாத நாடுகளின் தலைவர்களும் பங்கேற்க உள்ளனர். இதிலும் உக்ரேன் யுத்தம் தொடர்பில் கலந்துரையாடப்பட உள்ளது.
ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் இந்த சந்திப்புக்கு தலைமையேற்கிறார். NATO அமைப்பின் பாதுகாப்புச் செயலாளர், ஐரோப்பிய பாதுகாப்புச் சபை தலைவர், இத்தாலி, போலந்து, ஸ்பெயின், நெதர்லாந்து, டென்மார்க் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள், பல நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்கள், இங்கிலாந்து பிரதமர், ஜேர்மனி தலைவர் என பலர் இதில் பங்கேற்கின்றனர்.
“பலதரப்பட்ட வடிவங்களில் இந்த சந்திப்பு இடம்பெற உள்ளது” என ஜனாதிபதி மக்ரோன் குறிப்பிட்டார். இந்த சந்திப்பு, முந்தைய திங்கட்கிழமை சந்திப்பு போன்று ஜனாதிபதி மாளிகையான எலிசேயில் இடம்பெற உள்ளது.