இஸ்ரேல் பேருந்துகளில் வெடித்த குண்டுகள் - பொதுமக்களுக்கு எச்சரிக்கை

21 மாசி 2025 வெள்ளி 09:02 | பார்வைகள் : 2332
இஸ்ரேலின் டெல் அவிவின் தெற்கு புறநகர்ப் பகுதியில் மூன்று பேருந்துகள் வெடித்ததாக இஸ்ரேலிய பொலிசார் தெரிவித்தனர்.
எனினும் குண்டுவெடிப்பு நடந்த நேரத்தில் பேருந்துகள் நிறுத்தப்பட்டு காலியாக இருந்ததால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த வெடிப்பு பயங்கரவாத தாக்குதல் என சந்தேகிக்கப்படுவதாக இஸ்ரேல் பொலிஸார் கூறியுள்ளதுடன், பேட் யாமில் பல்வேறு இடங்களில் பல பேருந்துகள் வெடித்ததாக பல தகவல்கள் வந்துள்ளன என்று காவல்துறை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அந்த அறிக்கையின்படி, சந்தேக நபர்களைத் தேடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. சந்தேகத்திற்கிடமான கூடுதல் பொருட்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
அதேசமயம் பொதுமக்கள் அந்தப் பகுதிகளைத் தவிர்த்து, சந்தேகத்திற்கிடமான பொருட்கள் ஏதேனும் இருந்தால் எச்சரிக்கையாக இருக்குமாறும் இஸ்ரேல் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும் இரண்டு வெடிக்கும் சாதனங்கள் செயலிழந்துள்ளதாகவும் இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவித்தன.