சனிக்கிழமை காலையில் இருந்து தொடர் அதிரடி... இதுவரை 10 பேர் கைது!!

23 மாசி 2025 ஞாயிறு 11:08 | பார்வைகள் : 790
சிறையில் இருந்து தப்பிய போதைப்பொருள் கடத்தல் மன்னன் Mohamed Amra, கைது செய்யப்பட்டதன் பின்னர், அவர் தப்பிச் செல்ல உதவியதாக தெரிவிக்கப்பட்டு மேலும் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
2024 ஆம் ஆண்டு மே மாதத்தில் சிறைச்சாலையில் இருந்து நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லும் வழியில் Incarville சுங்கச்சாவடியில் (Eure) வைத்து முகமட் அம்ரா தப்பிச் சென்றிருந்தார். பின்னர் ஒன்பது மாதங்களின் பின்னர், ருமேனியாவில் வைத்து கைது நேற்று சனிக்கிழமை பெப்ரவரி 22 ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தார்.
அதை அடுத்து, நேற்றில் இருந்து நாட்டின் பல நகரங்களில் உள்ள பலர் அதிரடியாக கைது செய்யப்பட்டு வருகின்றனர். மொத்தமாக 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் எட்டுப் பேர் Rouen, Le Havre மற்றும் Evreux நகரங்களில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
தொடர்ந்தும் விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.