ரஷ்யா மீது புதிய தடைகளை அறிவிக்கும் பிரித்தானியா

23 மாசி 2025 ஞாயிறு 14:01 | பார்வைகள் : 417
உக்ரைன் மீது ரஷ்யா மேற்கொண்டுள்ள போர் மூன்று ஆண்டுகளைக் கடந்த நிலையில், பிரித்தானியா ரஷ்யாவிற்கு எதிராக புதிய தடைகளை அறிவிக்க உள்ளது.
வெளிநாட்டு செயலாளர் டேவிட் லாமி (David Lammy) இது தொடர்பாக புதிய, மிகப்பெரிய பொருளாதார தடைகளை அறிவிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்த தடைகள் ரஷ்யாவின் வருவாயை பாதிக்கவும், அதன் ராணுவத்தின் செயல்பாடுகளை தளர்த்தவும் உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
உக்ரைனின் பாதுகாப்பிற்கும் நீடித்த சமாதானத்திற்கும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய பங்காளிகளுடன் சேர்ந்து பிரித்தானியா தொடர்ந்து பணியாற்றும் என உறுதியளித்துள்ளது.
அத்துடன், பிரித்தானிய அரசு ஆண்டுதோறும் 3 பில்லியன் டொலர் மதிப்பிலான ராணுவ உதவி வழங்கி, உக்ரைன் வலுவாக இருக்க உதவும் எனவும், சமாதானத்தை ஏற்படுத்த அவசியமெனில் பிரித்தானிய இராணுவ படைகள் அமைதிக்காக அனுப்பப்படும் எனவும் அவர் கூறினார்.
புடினின் தாக்குதலை மிரட்டலாகக் காணும் ஐரோப்பிய நாடுகள், உக்ரைனை மேலும் ஆதரிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
இந்தப் போர் உலகளாவிய பொருளாதாரத்திற்கும், பிரித்தானிய மக்கள் வாழ்க்கைக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்றும் லாமி குறிப்பிட்டுள்ளார்.