Paristamil Navigation Paristamil advert login

கவின் படத்தில் வெற்றிமாறன் நடிக்கிறாரா ?

கவின்  படத்தில் வெற்றிமாறன் நடிக்கிறாரா ?

28 மாசி 2025 வெள்ளி 11:26 | பார்வைகள் : 5122


சமீபத்தில் கவின் நடிப்பில் வெளியான ஸ்டார் மற்றும் பிளடி பெக்கர் ஆகிய படங்கள் கலவையான விமர்சனங்களைப் பெற்றன. இந்நிலையில் இப்போது கவின் தன்னுடைய அடுத்த படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துக்கு ‘மாஸ்க்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. அறிமுக இயக்குனர் விகர்ணன் அசோக் இயக்க இந்த படத்தில் கவினுடன் ஆண்ட்ரியா முக்கிய வேடத்தில் டிக்கிறார்.

இந்த படத்தை வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம்ஸ் நிறுவனமும், ப்ளாக் மெட்ராஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றன. சமீபத்தில் இந்த படத்தின் சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளீல் நடந்தது. விறுவிறுப்பாக நடந்த ஷூட்டிங் தற்போது இறுதி கட்டத்தில் உள்ளது.

சமீபத்தில் இந்த  படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியாகிக் கவனம் பெற்றது. இந்நிலையில் இந்த படத்தைத் தயாரிக்கும் வெற்றிமாறன் ஒரு கௌரவ தோற்றத்தில் இந்த படத்தில் நடித்துள்ளதாக தகவல் பரவி வருகிறது. ஆனால் அந்த தகவல் உண்மையில்லை என்று படக்குழுவுக்கு நெருங்கிய வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்