முதலாம் உலகப்போரின் 'நீண்ட யுத்தம்'! - Battle of Verdun!!
23 ஆடி 2017 ஞாயிறு 10:30 | பார்வைகள் : 18646
முதலாம் உலகப்போரின் நூற்றாண்டு நினைவுகளில் இருக்கும் இந்த சமயத்தில், நீண்ட நாட்கள் இடம்பெற்ற ஒரு யுத்தமாக Verdun (Battle of Verdun) குறிப்பிடப்படுகிறது. அதுகுறித்த சில தகவல்கள் உங்களுக்காக...!!
Verdun எங்கு உள்ளது? பிரான்சின் கிழக்கு பிராந்தியமான தற்போதைய Grand Est மாகாணத்தில் உள்ள ஒரு மாவட்டம் தான் Verdun. ஒரு பக்கத்தில் பெல்ஜிய எல்லையும், மறுபுறத்தில் ஜெர்மன், லக்ஸம்பர்க் எல்லைகளையும் கொண்ட பகுதி இது. இங்கு, முதலாம் உலகப்போரின் போது மிக நீண்ட யுத்தம் இடம்பெற்றது.
யுத்தத்துக்கான காரணம் மிக சிறியது. பிரான்சின் நிலப்பிராந்தியங்களை கையகப்படுத்த நினைத்த ஜெர்மன் தேர்ந்தெடுத்த நிலப்பகுதி தான் Verdun. முதலாம் உலக யுத்தம் ஆரம்பித்து இரண்டு வருடங்கள் ஆன நிலையில், 1916 ஆம் ஆண்டு பெப்ரவரி 21 ஆம் திகதி, 130,000 படைகளுடன் Verdun பகுதிக்கு வந்திறங்கியது ஜெர்மன். ஆனால் பிரான்சிடம் அத்தனை எண்ணிக்கையிலான படைகள் இருக்கவில்லை. வெறுமனே 30,000 படைகள் தான் பிரான்ஸ் அனுப்பியிருந்தது.
எண்ணிக்கையில் ஜெர்மனிடம் அதிக வீரர்கள் இருந்ததால், யுத்தத்தில் ஜெர்மனியின் கைகள் ஓங்கியிருந்தது. வந்திறங்கியிருக்கும் படைகளின் எண்ணிக்கை தெரியாமல்.. பிரான்ஸ் குறைந்த அளவு வீரர்களை அனுப்ப... புற்றீசல் போல் குவிந்த ஜெர்மன் படையினர் தாக்குதல்களில் ஆதிக்கம் செலுத்தினர்.
யுத்தம் மாதக்கணக்கில் நீடித்தது.. ஐந்து.. ஆறு மாதங்களில் யுத்தம் மேலும் சிக்கலுக்கு உள்ளாகியது. அப்போது இரு படைப்பிரிவிலும் இழப்புகள் தொடர பத்து இலட்சத்துக்கும் மேற்பட்ட வீரர்களை களத்துக்கு அனுப்பவேண்டிய தேவை இரு நாடுகளுக்கும் ஏற்பட்டது.
வீரர்களின் எண்ணிக்கை கவர்ச்சியாக இருந்தாலும், அதன் பின்னால் உள்ள மன உளைச்சல்கள் மிக வீரியம் கொண்டவை. உணவு தட்டுப்பாடு முதல் பிரச்சனை.. மருத்துவ வசதி உள்ளிட்ட பல காரணிகள் இந்த யுத்தத்தை தளர்த்தியது.
மொத்தமாக ஜெர்மன் 1,250,000 வீரர்களை இந்த யுத்தத்தில் ஈடுபடுத்தியிருந்தது. 1,140,000 வீரர்களை பிரான்ஸ் ஈடுபடுத்தியிருந்தது. 9 மாதங்களும், 27 நாட்களும் இடம்பெற்ற இந்த யுத்த முடிவில், பிரான்ஸ் தரப்பில் 162,000 வீரர்களும், ஜெர்மன் தரப்பில் 143,000 வீரர்களும் கொல்லப்பட்டிருந்தனர்.
1916 ஆம் ஆண்டு டிசம்பர் 18 ஆம் திகதி, இந்த யுத்தம் முடிவுக்கு வந்தது. யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்ததில் பெரும் பங்கு வகித்தது காலநிலை. கடுமையான குளிரை சமாளிக்க முடியாமல் வீரர்கள் திணறினார்கள் என வரலாறு பதிவு செய்துள்ளது.
மிக குறிப்பாக, முதலாம் உலகப்போரின் போது நீண்ட நாட்கள் இடம்பெற்ற யுத்தமாக இது அடையாளப்படுத்தப்பட்டது.!!