Paristamil Navigation Paristamil advert login

அருங்காட்சியகத்தை சுற்றிப்பார்க்கச் சென்ற கைதி.. தப்பி ஓட்டம்!

அருங்காட்சியகத்தை சுற்றிப்பார்க்கச் சென்ற கைதி.. தப்பி ஓட்டம்!

31 தை 2025 வெள்ளி 10:47 | பார்வைகள் : 3944


Seine-Saint-Denis நகரில் உள்ள Villepinte தடுப்புச் சிறைச்சாலையில் சிறைவைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர், அருங்காட்சியகம் ஒன்றை சுற்றிப்பார்க்க அழைத்துச் செல்லப்பட்டிருந்த நிலையில், தப்பி ஓடியுள்ளார்.

ஜனவரி 29, புதன்கிழமை நண்பகல் வேளையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 28 வயதுடைய கைதி ஒருவர் உட்பட ஐந்து கைதிகள், Musée de l'Homme அருங்காட்சியகத்தினை பார்வையிட அழைத்துச் செல்லப்பட்டிருந்த நிலையில், அவர்களில் குறித்த நபர் Gare du Nord தொடருந்து நிலையத்தில் வைத்து தப்பி ஓடியுள்ளார்.

இன்று இரண்டு நாட்கள் ஆன நிலையில் அவர் மீண்டும் கைது செய்யப்படவில்லை.

கைதிகளுடன் ஐந்து அதிகாரிகளும், ஒரு சிறைச்சாலை பாதுகாவலரும் சம்பவத்தில் போது உடனிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்