டி20 உலக கிண்ணத் தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்ற இந்திய அணி
3 மாசி 2025 திங்கள் 14:16 | பார்வைகள் : 317
19 வயதுக்கு உட்பட்டோருக்கான மகளிர் டி20 உலக கிண்ணத் தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது இந்திய அணி.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இன்று நடந்த போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சாதனை படைத்துள்ளது.
இதுகுறித்து பேசியுள்ள இந்திய அணியின் அணித்தலைவர் நிகி பிரசாத், போட்டியின் போது அனைவரும் நிதானமாகவும், அமைதியாகவும் செயல்பட முயற்சித்தோம், எங்களது வேலையை திறம்பட செய்து முடித்தோம்.
எங்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்த பிசிசிஐக்கு நன்றி, வெற்றி பெற்றதில் மிக்க மகிழ்ச்சி, இதன் மூலம் இந்திய அணி உயரத்தில் இருக்கிறது என தெரிவித்துள்ளார்.
இது மிகவும் சிறப்பான தருணம் என தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டுள்ளார்.