இலங்கை அரசு நிறுவனங்களுக்கான விசேட அறிவிப்பு

3 மாசி 2025 திங்கள் 14:14 | பார்வைகள் : 3690
77 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, இம்மாதம் முதலாம் திகதி முதல் 07 ஆம் திகதி வரை அரசு நிறுவனங்களில்
தேசியக் கொடி ஏற்றவும், கட்டிடங்களை மின் விளக்குகளால் அலங்கரிக்கவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அதன்படி, நாளை மற்றும் நாளை மறுதினம் அரசு நிறுவனங்களின் கட்டிடங்களை மின் விளக்குகளால் அலங்கரிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
குறித்த விடயம் தொடர்பாக பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் என அனைத்து அரச நிறுவனங்களுக்கும் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.