Paristamil Navigation Paristamil advert login

இரண்டு வருட இடைவெளி, வசூலை அள்ளுமா 'விடாமுயற்சி' ?

இரண்டு வருட இடைவெளி, வசூலை அள்ளுமா 'விடாமுயற்சி' ?

3 மாசி 2025 திங்கள் 15:56 | பார்வைகள் : 706


பிப்ரவரி மாதத்தின் முதல் வெளியீடாக அஜித், திரிஷா, அர்ஜுன், ரெஜினா மற்றும் பலர் நடித்துள்ள 'விடாமுயற்சி' படம் பிப்ரவரி 6ம் தேதி வெளியாக உள்ளது. பொதுவாக அஜித் நடிக்கும் படம் என்றாலே எந்தவிதமான நிகழ்ச்சிகளும் நடைபெறாது. தான் நடிக்கும் படங்களின் புரமோஷன்களில் கலந்து கொள்ளும் பழக்கம் அஜித்துக்குக் கிடையாது. இப்படியே இத்தனை வருடங்களை அவர் கடந்துவிட்டார். படத்தின் இயக்குனர் மகிழ் திருமேனி, நடிகை ரெஜினா ஆகியோரது பேட்டிகளைத்தான் யூடியுப்களில் பார்க்க முடிகிறது.

அஜித் அவருடைய படம் பற்றிப் பேசவில்லை என்றாலும் அவரது படங்களுக்கான ஓபனிங் எப்போதுமே சிறப்பாக இருக்கும். அஜித் நடித்து கடைசியாக 2023 பொங்கலுக்கு 'துணிவு' படம் வெளிவந்தது. இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு வரும் படம் என்பதால் 'விடாமுயற்சி' படம் மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது. பிப்ரவரி 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் இப்படத்திற்கான ஆன்லைன் முன்பதிவு சிறப்பாக உள்ளது. பெரும்பாலான காட்சிகள் ஹவுஸ்புல் ஆகியுள்ளன.

கடந்த வருடம் வெளிவந்த படங்களில் விஜய் நடித்த 'தி கோட்' படம்தான் அதிக வசூலைப் பெற்றது. அந்தப் படத்தின் வசூலை 'விடாமுயற்சி' முறியடிக்குமா என்பதுதான் திரையுலகிலும், ரசிகர்களிடத்திலும் உள்ளது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்