Paristamil Navigation Paristamil advert login

கனடா , மெக்சிகோ வரி விதிப்பை இடைநிறுத்தும் ட்ரம்ப் ..!

கனடா , மெக்சிகோ வரி விதிப்பை இடைநிறுத்தும் ட்ரம்ப் ..!

4 மாசி 2025 செவ்வாய் 07:08 | பார்வைகள் : 918


கனடா மற்றும் மெக்சிகோ மீது விதிக்கப்பட்ட வரிகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது ட்ரூத் சமூக வலைதள பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, இந்த இரு நாடுகளுக்கும் இன்று முதல் அமுல்படுத்த திட்டமிடப்பட்டிருந்த 25 சதவீத வரி ஒரு மாதத்திற்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை எல்லைப் பாதுகாப்பை மேம்படுத்தவும், போதைப்பொருள் கடத்தலைத் தடுக்கவும் நடவடிக்கை எடுக்க மெக்சிகோவும் கனடாவும் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து இந்த தீர்மானம் மேற்கொண்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், சீனா, மெக்சிக்கோ மற்றும் கனடா ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரி விதிக்கப்படும் என அறிவித்ததனை அடுத்து ஆசியப் பங்குச் சந்தைகள் பெரும் வீழ்ச்சியடைந்துள்ளன.

ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகளின் பங்குச்சந்தையின் குறியீடுகள் சரிவை கண்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்