அதிர்ச்சியளிக்கும் வீடற்றவர்களின் எண்ணிக்கை.. குடியேற்றம் தடைப்படுகிறது??!!
4 மாசி 2025 செவ்வாய் 13:22 | பார்வைகள் : 712
அதிகளவான குடியேற்றங்கள் காரணமாக பிரான்சில் வீடற்றவர்களின் (SDF) எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
தற்போது பிரான்சில் 350,000 பேர் வீடற்றவர்களாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த எண்ணிக்கை இதற்கு முன்னர் எப்போதும் பதிவாகாத எண்ணிக்கையாகும். 2012 ஆம் ஆண்டில் 140,000 பேர் வீடற்றவர்களாக இருந்த நிலையில், கடந்த மூன்று ஆண்டுகளில் தொடர்ச்சியாக இந்த எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதிகதிகளின் வருகையும், புகலிடக்கோரிக்கையாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதை அடுத்து, வீடுகள் பெற்றுக்கொள்வது பெரும் சிரமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
2023 ஆம் ஆண்டின் குளிர்காலத்தின் போது அவசரகால தங்குமிடங்களில் 203,000 பேர் தங்கவைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளதை அடுத்து, குடியேற்றம் தொடர்பான சட்டங்கள் இறுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. அதேவேளை குடியேற்றத்துக்கான தற்காலிக தடை ஒன்றையும் விதிக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.