Paristamil Navigation Paristamil advert login

கூகுள் , யூடியூப் மீது ஐஸ்வர்யா ராய் மகள் வழக்கு..

கூகுள் , யூடியூப் மீது ஐஸ்வர்யா ராய் மகள் வழக்கு..

4 மாசி 2025 செவ்வாய் 14:17 | பார்வைகள் : 203


கூகுள் மற்றும் யூடியூப் மீது பிரபல நடிகை ஐஸ்வர்யா ராய் மகள் வழக்கு தொடர்ந்த நிலையில், இந்த வழக்கு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டு, சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல பாலிவுட் திரையுலக நட்சத்திர ஜோடி அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் மகள் ஆராத்யா உடல்நலம், மனநலம் குறித்து கடந்த சில வருடங்களாகவே சர்ச்சைக்குரிய வகையில் செய்திகள் வெளியாகி வருகின்றன. மேலும், யூடியூபில் சில வீடியோக்கள் இவர் குறித்து வெளியானது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், ஆராத்யாவின் உடல்நலம் மற்றும் மனநலம் குறித்து தவறான தகவல்கள் வெளியிடக்கூடாது என நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. ஆனாலும், சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தொடர்ந்து வெளிவரவே, கூகுள் மற்றும் யூடியூப் மீது ஆராத்யா வழக்கு தொடர்ந்துள்ளார்.

தாய்-தந்தையின் உதவியோடு, டெல்லி உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கை ஆராத்யா பதிவு செய்துள்ளார். இதுதொடர்பாக, கூகுள் மற்றும் யூடியூப் பதிலளிக்க வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த வழக்கு மார்ச் 17 ஆம் தேதி விசாரணைக்கு வரும் என கூறப்படுகிறது. பாலிவுட் டைம்ஸ், கூகுள், யூடியூப் உள்பட பலர் இந்த வழக்கில் எதிர்மனுதாரராக சேர்க்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்