கனடாவில் பொருளாதாரம் தொடர்பிலான நிச்சயமற்ற நிலைமை - கியூபெக் முதல்வர்
5 மாசி 2025 புதன் 09:09 | பார்வைகள் : 312
கனடாவில் பொருளாதாரம் தொடர்பிலான நிச்சயமற்ற நிலைமை நீங்கவில்லை என கியூபெக் மாகாண முதல்வர் பிரான்கோயிஸ் லாகுலெட் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவினால் அறிவிக்கப்பட்ட வரி விதிப்பு தொடர்பில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
வரி விதிப்பு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டமை மகிழ்ச்சி அளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த நிச்சயமற்ற நிலைமை நீடிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த வரி விதிப்பு அச்சுறுத்தல்கள் காரணமாக ஏற்கனவே கியூபெக் மாகாண நிறுவனங்கள் நெருக்கடிகளை எதிர்நோக்க நேரிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.