போதைப்பொருள் உட்கொண்ட 49 சாரதிகள்... பாடசாலை பேருந்துகள் திடீர் சோதனை.. !!
5 மாசி 2025 புதன் 11:31 | பார்வைகள் : 487
கடந்தவாரத்தில் பாடசாலை பேருந்துகளின் சாரதிகள் மீது காவல்துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர். அதில் 49 சாரதிகள் போதைப்பொருள் உட்கொண்டுவிட்டு பேருந்தை செலுத்தியுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இரு வாரங்களுக்கு முன்னர் Eure-et-Loir மாவட்டத்தில் இடம்பெற்ற விபத்து ஒன்றில் 15 வயதுடைய சிறுமி ஒருவர் கொல்லப்பட்டிருந்தார். விபத்து தொடர்பான விசாரணைகளில், பேருந்து சாரதில் கஞ்சா உட்கொண்டிருந்தது தெரியவந்தது. அதை அடுத்து உள்துறை அமைச்சர் பாடசாலை பேருந்துகளின் சாரதிகளை சோதனையிடுமாறு காவல்துறையினருக்கு அறிவுறுத்தியிருந்தார்.
அதை அடுத்து, இவ்வார திங்கட்கிழமை முதல் சாரதிகள் திடீரென சோதனையிடப்பட்டனர். மொத்தமாக இதுவரை 8,000 சாரதிகள் சோதனையிடப்பட்டனர். அவர்களில் 44 பேர் கஞ்சா உட்கொண்டுவிட்டு பேருந்து செலுத்தியுள்ளமை தெரியவந்துள்ளது. அதேவேளை, ஐவர் மதுபோதையில் பேருந்து செலுத்தியமையும் தெரியவந்துள்ளது.
அவர்கள் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வார வெள்ளிக்கிழமை வரை இந்த நடவடிக்கை தொடரும் என உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.