இலங்கையில் பெண்கள் ஜனநாயக மறுமலர்ச்சியை தூண்டுகிறார்கள்!
![இலங்கையில் பெண்கள் ஜனநாயக மறுமலர்ச்சியை தூண்டுகிறார்கள்!](ptmin/uploads/news/Articles_renu_harini_oath.jpg)
6 மாசி 2025 வியாழன் 13:10 | பார்வைகள் : 202
பாராளுமன்றத்தின் சாதாரண அமர்வின் போது வெளியான சுருக்கமான கருத்துதான் அது.
ஆனால் இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரிய பலம்வாய்ந்த தலைவர்களாலும் அவர்களின் ஞனரஞ்சக அரசியலாலும் சில காலத்திற்கு முன்னர் சிதைக்கப்பட்ட நாடு பெண்களிற்கான மாற்றமான தருணத்தில் நுழைந்துள்ளது என்பதை உணர்ந்த தருணம் அது.
எனது ஆண் சகாவொருவர்( பெண்ணிலைவாதியில்லை என ஹரிணி தெரிவிக்கின்றார்)நாடாளுமன்றத்தில் தனது ஆசனத்திலிருந்து எழுந்து பராமரிப்பு பொருளாதாரம் எனப்படும் ஏனையவர்களை பராமரிக்கும் பணியை அங்கீகரிக்கும்வரை பெண்களை தொழில்துறையில் முழுமையாக உள்வாங்க முடியாது என தெரிவித்தார்(stood up to say that the island nation could not get more women into the formal work force unless it officially recognized the “care economy” — work caring for others.)என ஹரிணி அமரசூரிய தெரிவிக்கின்றார்.
நீண்டகாலமாக செயற்பாட்டாளர்கள் அல்லது அல்லது மறக்கப்பட்ட பாலினதிணைக்களங்களிற்கு மாத்திரம் என ஒதுக்கப்பட்டிருந்த அந்த கருத்தை - மொழியை அரசாங்கத்தின் மத்தியில் கேட்டது பெரும் சிலிர்ப்பை ஏற்படுத்தியது என்கின்றார் ஹாணி அமரசூரிய.
இத்தனை வருட போராட்டங்களிற்கு பலம் கிடைத்துள்ளது என்பது போல உணர்ந்தேன் என்கின்றார் ஹரிணி அமரசூரிய.
பொருளாதார அழிவை கொண்டுவந்த அரசியல் வம்சாவளியை நாட்டிலிருந்து துரத்தியடித்த இரண்டு வருடங்களின் பின்னர் இலங்கை தற்போது வாழ்நாளில் ஒரு தடவை சாத்தியமாக கூடிய மீள்உருவாக்கத்தின் மத்தியில் உள்ளது.
சீற்றம்முழுமையான மாற்றத்திற்கான அமைதியான உறுதிப்பாடாக மாறியுள்ளது.
கடந்த வருடம் இடம்பெற்ற இரண்டு தேர்தல்களின் மூலம்( ஜனாதிபதிக்கான தேர்தல் - நாடாளுமன்றத்திற்கான தேர்தல்)பல தசாப்தங்களாக நாட்டை ஆண்ட பழைய உயர் குழாத்தினர் வெளியேற்றப்பட்டனர்.
அவர்களின் இடத்திற்கு இடதுசாரி இயக்கமொன்று வந்துள்ளதுடன் மேலும் அதிகளவு சமநிலையான சமூகம் குறித்த வாக்குறுதியை வழங்கியுள்ளது.
2022 ஜூலையில் இலங்கை ஜனாதிபதி தப்பிச்செல்லவேண்டிய நிலையை ஏற்படுத்திய எதிர்ப்பு இயக்கத்தின் உந்துசக்திகளாக பெண்கள் காணப்பட்டனர்.
நாட்டில் எரிபொருளும் பணமும் முற்றாக தீர்ந்துபோன தருணத்தில் பெண்களே அந்த சுமையை சுமக்கவேண்டிய நிர்ப்பந்தத்திற்குள்ளானார்கள்.
அவர்களின் சீற்றம் அவர்களை வீதிக்கு இறங்கியது.
இப்போது வலிமையானவர்களின் விருப்பத்திற்கு மாறாக நாட்டிற்கு நீடித்த பாதுகாப்பை வழங்குவதற்கான முயற்சிகளின் மையமாக பெண்களே உள்ளனர்.
சமமான தளத்தினை வழங்க கூடிய அரசியல் கலாச்சாரத்தினை மாற்றியமைக்ககூடிய வகையில் பெண்கள் அதனை மெதுவாக ஆனால் உறுதியாக மாற்றிவருகின்றனர்.
இலங்கையின் வாக்காளர்களில் 56 வீதமாக காணப்பபடும் பெண்கள்இசிறிய இடது சாரி கட்சியான தேசிய மக்கள் சக்தி கடந்த வருடம் தேர்தல்களில் வெற்றிபெறுவதற்கு காரணமாகயிருந்தனர்.
கட்சியின் தலைவர் ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க தனது வாழ்க்கையின் பெரும்பகுதியை இடதுசாரி அரசியலிலே செலவிட்டுள்ளார்.அவர் சமூகவியலாளரும் செயற்பாட்டாளருமான ஹாணி அமரசூரியவை பிரதமராக நியமித்தார்.இலங்கையின் இரண்டாவது அதிகாரம் மிக்க பதவி.
தென்னாசியாவில் முன்னைய தலைவர்களின் மகள் அல்லது மனைவியில்லாத ஒருவர் பிரதமரானது இதுவே முதல்தடவை.
ஆட்சியை பெண்களிற்கு நெருக்கமானதாக மாற்றாமல் அதிகளவு சமத்துவமான சமூகத்தை உருவாக்க முடியாது எனநீண்டகாலமாக ஹரிணி அமரசூரிய வாதிட்டுவந்துள்ளார்.
கொள்கை உருவாக்கத்தில் பெண்ணிலைவாதம் தொடர்பான உணர்வினைபுகுத்தவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
ஊதியத்தில் பெண்களிற்கு சமமான அந்தஸ்த்தினை வழங்குவது வேலைத்தளங்களை பெண்களிற்கு சிறந்ததாக மாற்றுவது போன்ற விடயங்கள் குறித்து அரசாங்கம் கொள்கை விவாதங்களை ஆரம்பித்துள்ளது.
முறையான தொழில்சார்படையணியில் பெண்களின் எண்ணிக்கையை 33 வீதத்திலிருந்து 50 வீதமாக மாற்ற அரசாங்கம் எண்ணியுள்ளது.
நீங்கள் அரசாங்கத்தை பற்றி சிந்திக்கும் விதத்தில் மாற்றம்-அதிகாரம் குறித்து நீங்கள் சிந்திக்கும் விதத்தில் மாற்றம் நிகழ்கின்றது என ஹரிணி அமரசூரிய தெரிவிக்கின்றார்.விஐபி கலாச்சார அரசியலை முடிவிற்கு கொண்டுவருவதற்கான செயற்பாடுகளும் இடம்பெற்றுள்ளன.
நீண்டதூர வாகன தொடரணிகளை காண முடிவதில்லைபெருமளவு பாதுகாப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கு மாளிகைகள் போன்றவை இல்லை.
கொழும்பில் தேர்தலில் போட்டியிட்ட ஹரிணி அமரசூரிய முன்னாள் ஜனாதிபதியும் பிரதமரும் யுத்தவெற்றி கதாநாயகனும் 2022 இல் பதவியிலிருந்து அகற்றப்பட்ட ஜனாதிபதியின் சகோதரருமான மகிந்த ராஜபக்ச பெற்ற சாதனை வாக்குகளை விட அதிகம் பெற்றார்.
அமரசூரியவும் ஏனைய பெண்களும் பெற்ற பெரும் வெற்றிகள் பெண் அரசியல்வாதிகளால் வெல்ல முடியாது என்ற கற்பிதத்தை தகர்த்தது.நாடாளுமன்றத்தில் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
எனினும் நாடு இன்னமும் நீண்டதூரம் பயணிக்க வேண்டிய நிலையில் உள்ளது.மொத்த சனத்தொகையில் பத்து வீதமானவர்களே நாடாளுமன்ற உறுப்பினர்களாக உள்ளனர்.
திசநாயக்கவின் அமைச்சரவையில் 21 ஆண்கள் உள்ளனர் இரண்டு பெண்கள் மாத்திரமே உள்ளனர்.
நன்றி virakesari
![](/images/engadapodiyalxy.jpg)