Paristamil Navigation Paristamil advert login

அமைச்சர் சந்திரகேசரனுடன் மோதிய அர்ச்சுனா எம்.பி!

அமைச்சர் சந்திரகேசரனுடன் மோதிய அர்ச்சுனா எம்.பி!

6 மாசி 2025 வியாழன் 16:18 | பார்வைகள் : 803


நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனிற்கும் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரிற்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், தனது உரை நேரத்தின் போது, அண்மையில் ஜனாதிபதி யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தமை தொடர்பில் கருத்து தெரிவித்து கொண்டிருந்துள்ளார்.

இதன்போது, இடையில், நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன், குறுக்கிட்டு பேசிய போது, இருவருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், ” உங்களை போல், முகப்புத்தகத்தில் அனைத்தையும் பகிர்ந்து கொண்டு எங்களாலும் படம் காட்ட முடியும். ஆனால் நாங்கள் அதை செய்வதில்லை” என சந்திரசேகர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் அவர், தனக்கான உரை நேரத்தை பெற்று கொண்டு பின்னர் உரையாற்றுமாறும் அவர் அர்ச்சுனாவை வலியுறுத்தியுள்ளார்.

மேலும், எதிர்கட்சி தலைவரிடம் உங்களுக்கான நேரத்தை பெற்று கொண்டு பேசுங்கள் எனவும் கூறியுள்ளார்.



Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்