இடுப்பு சதை குறைய எளிய பயிற்சி
1 தை 2023 ஞாயிறு 17:00 | பார்வைகள் : 9960
இன்றைய பெண்கள் தொப்பை மற்றும் இடுப்பின் அதிகப்படியான சதையால் பெரிதும் கவலைப்படுகின்றனர். இதற்காக உடற்பயிற்சி கூடத்திற்கு போய் தான் பயிற்சி செய்ய வேண்டும் என்பதில்லை. வீட்டிலேயே செய்யக்கூடிய எளிய உடற்பயிற்சியை பார்க்கலாம்.
இந்த பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால் 3 மாதத்தில் இடுப்பு சதை குறைவதை காணலாம். பயிற்சி செய்முறை விரிப்பில் நேராக படுத்துக் கொள்ளவும். பின்னர் வலது பக்கமாக திரும்பி படுத்துக் கொள்ளவும். வலது காலின் மேல் இடது கால் இருக்க வேண்டும்.
மெதுவாக வலது கையை தரையில் ஊன்றி உடலை மெதுவாக மேலே உயர்த்தவும். இடது கையை இடுப்பில் (படத்தில் உள்ளபடி ) வைத்துக் கொள்ளவும். சில விநாடிகள் இந்த நிலையில் இருந்த பின்னர் பழைய நிலைக்கு வரவும்.
இவ்வாறு வலது பக்கம் 20 முறை செய்யவும். பின்னர் அடுத்த பக்கம் திரும்பி இடது பக்கம் இதே போல் 20 முறை செய்யவும். இவ்வாறு மாறிமாறி செய்ய வேண்டும்.
ஆரம்பத்தில் 10 முறை செய்தால் போதுமானது. பின்னர் எண்ணிக்கையின் அளவை அதிகரித்து 20 முறைக்கு மேல் செய்யலாம். இந்த பயிற்சியை தொடர்ந்து தினமும் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.