அர்ச்சுனாவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு சிக்கல்?

7 மாசி 2025 வெள்ளி 10:22 | பார்வைகள் : 3407
பாராளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதனை பொது சேவையில் இருந்து நீக்கவில்லை என மேல் முறையீட்டு நீதிமன்றில் சத்திய கடதாசி அணைக்கப்பட்டுள்ளது.
அருச்சுனா இராமநாதன் பொது சேவையில் உள்ளமையால் , அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வறிதாக்கப்பட வேண்டும் என மேல் முறையீட்டு நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு விசாரணையின் போது, அருச்சுனா இராமநாதன் இன்னமும் பொது சேவையில் உள்ளார் என்றும் அவர் பதவி நீக்கம் செய்யப்படவில்லை என சுகாதார அமைச்சின் செயலாளரினால் சத்திய கூற்று நிறைவேற்றப்பட்டு நீதிமன்றில் அணைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அருச்சுனாவின் தரப்பு சட்டத்தரணி , தனது சமர்ப்பணங்களை முன் வைக்க கால அவகாசம் கோரியுள்ளமையால் வழக்கு எதிர்வரும் மே மாதம் 14ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
3