காதலர் வாரத்தின் சிறப்பு நாட்களைப் பற்றி தெரியுமா ?
![காதலர் வாரத்தின் சிறப்பு நாட்களைப் பற்றி தெரியுமா ?](ptmin/uploads/news/Social_tharshi_lo.jpg)
8 மாசி 2025 சனி 12:40 | பார்வைகள் : 259
ஆண்டுதோறும் பிப்ரவரி 14ஆம் தேதி உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதிலும் காதலர் வாரம் என்பது காதலர்களுக்கு ஒரு சிறப்பான வாரமாகும். இந்த நாட்களில் காதலர்கள் தங்கள் உறவை வலுப்படுத்தவும், தங்கள் அன்பை வெளிப்படுத்தவும் வாரத்தின் ஒவ்வொரு நாளும் சிறப்பான முறையில் கொண்டாடுகிறார்கள்.
இது பிப்ரவரி 7ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினத்தில் முடிவடைகிறது. ஒவ்வொரு நாளுக்கும் ஒரு சிறப்பு முக்கியத்துவம் உண்டு. காதல் ஜோடியாக இருந்தாலும் சரி, புதுமணத் தம்பதியாக இருந்தாலும் சரி, இந்த காதலர் தின வாரத்தை கொண்டாடி வருகின்றனர். நீங்களும் உங்கள் அன்பை வெளிப்படுத்த விரும்பினால், இந்த காதலர் வாரத்தின் சிறப்பு நாட்களைப் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள். 2025 காதலர் தின வாரத்தின் 7 நாட்களின் தேதிகளையும், அதற்கான முக்கியத்துவத்தையும் பற்றி விரிவாக பார்ப்போம்.
காதலர் வாரம் பிப்ரவரி 7 ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 13 ஆம் தேதி முடிவடைகிறது. அதைத் தொடர்ந்து பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. காதலர் தினம் என்பது காதலர்களுக்கு மட்டுமல்ல, திருமணமானவர்களும் கொண்டாடலாம்.. ரோஸ் டே (பிப்ரவரி 7), ப்ரோபோஸ் டே (பிப்ரவரி 8), சாக்லேட் டே (பிப்ரவரி 9), டெடி டே (பிப்ரவரி 10), ப்ராமிஸ் டே (பிப்ரவரி 11), ஹக் டே (பிப்ரவரி 12) மற்றும் கிஸ் டே (பிப்ரவரி 13) ஆகியவை காதலின் ஏழு நாட்கள் ஆகும்.
ரோஸ் டே என்பது காதலர் வாரத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது. காதலர்கள் ஒருவருக்கொருவர் ரோஜாக்களை கொடுத்து தங்கள் அன்பை வெளிப்படுத்துகிறார்கள். ரோஜாவின் ஒவ்வொரு நிறமும் வெவ்வேறு உணர்ச்சிகளைக் குறிக்கிறது. சிவப்பு ரோஜா - காதல் மற்றும் ஆர்வத்தை அடையாளப்படுத்துகின்றன, பிங்க் ரோஜா - பாராட்டு மற்றும் நன்றியுணர்வைக் குறிக்கின்றன, வெள்ளை ரோஜா - தூய்மை மற்றும் அப்பாவித்தனத்தை அடையாளப்படுத்துகின்றன, மற்றும் மஞ்சள் ரோஜா - நட்பு மற்றும் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றன.
இந்த நாளில் உங்கள் காதலை ப்ரோபோஸ் பண்ணலாம். ரோஸ் டே-வில் உங்களால் உங்கள் உணர்வுகளை நன்றாக வெளிப்படுத்த முடியாவிட்டால், உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த மற்றொரு வாய்ப்பாக ப்ரோபோஸ் டே உள்ளது. இந்த நாள் உங்கள் அன்பை வெளிப்படுத்தவும், உங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருக்க உங்கள் துணையிடம் ப்ரோபோஸ் செய்ய ஒரு சிறந்த வாய்ப்பாகும்.
பிப்ரவரி 9ஆம் தேதி கொண்டாடப்படும் சாக்லேட் டே என்பது இனிப்பு மற்றும் அன்பின் சின்னம். இந்த நாளில், மக்கள் தங்கள் அன்புக்குரியவர்களுக்கு சாக்லேட்களை பரிசாக வழங்குகிறார்கள். இதனால் அவர்களின் உறவு மிகவும் இனிமையாக மாறும். சாக்லேட் சுவையானது மட்டுமல்ல, மனநிலையையும் மேம்படுத்துகிறது. உங்கள் துணைக்கு அவர்களுக்குப் பிடித்த சாக்லேட் அல்லது சாக்லேட் கிஃப்ட் பாக்ஸைக் கொடுப்பதன் மூலம் இந்த நாளை சிறப்பானதாக மாற்றலாம்.
பிப்ரவரி 10ஆம் தேதி கொண்டாடப்படும் டெடி டே-வில், காதலர்கள் டெடி பியர்களை ஒருவருக்கொருவர் பரிசாக அளித்து தங்கள் அன்பை வெளிப்படுத்துகிறார்கள். டெடி கரடிகள் குழந்தைப் பருவ நினைவுகளைத் திரும்பக் கொண்டுவருகின்றன. தங்கள் துணைக்கு அழகான மற்றும் மறக்க முடியாத ஒன்றை கொடுக்க விரும்புவோருக்கு இந்த நாள் சிறப்பு வாய்ந்தது.
பிப்ரவரி 11ஆம் தேதி கொண்டாடப்படும் ப்ராமிஸ் டே-வில் காதலர்கள் ஒருவருக்கொருவர் ப்ராமிஸ் செய்கின்றனர். இது அவர்களின் உறவை வலுப்படுத்த உதவுகிறது. இந்த நாள் ஒருவருக்கொருவர் நம்பிக்கை, நேர்மை மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றை பரிமாறிக்கொள்கின்றனர்.
பிப்ரவரி 12ஆம் தேதி கொண்டாடப்படும் ஹக் டே என்பது ஒருவரையொருவர் கட்டிப்பிடித்து தங்களின் அன்பையும், பாசத்தையும் வெளிப்படுத்தும் நாளாகும். ஹக் என்பது காதல், அரவணைப்பு, ஆறுதல் மற்றும் பாதுகாப்பைக் குறிக்கும் ஒரு உணர்வு ஆகும். இந்த நாளில், துணையை கட்டிப்பிடிப்பதன் மூலம் ஒருவரின் அன்பும் பாசமும் வெளிப்படும். அன்பான அரவணைப்பு மகிழ்ச்சியடைய செய்து உறவை பலப்படுத்தும்.
பிப்ரவரி 13 ஆம் தேதி கொண்டாடப்படும் கிஸ் டே என்பது காதலர் வாரத்தின் மிகவும் ரொமாண்டிக் நாட்களில் ஒன்றாகும். இந்நாளில் காதலர்கள் ஒருவருக்கொருவர் முத்தமிட்டு, தங்கள் அன்பையும், ஆழமான உணர்ச்சி ரீதியான தொடர்பையும் வெளிப்படுத்துகிறார்கள். எனவே இந்த நாளானது காதலர்கள் தங்கள் காதலை ஆழமாக உணரவும், தங்கள் உறவில் நெருக்கத்தை அதிகரிக்கவும் வாய்ப்பளிக்கிறது.
காதலர் தினம் என்பது அன்பை வெளிப்படுத்தவும், உறவுகளை சிறப்புற செய்யவும் ஒரு நாள். இந்த நாளில், காதலர்கள் தங்கள் துணையுடன் இரவு உணவுகள், ஆச்சரியமான பரிசுகள், காதல் நிறைந்த செய்திகள் மற்றும் எண்ணற்ற மறக்க முடியாத தருணங்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.
![](/images/engadapodiyalxy.jpg)