Paristamil Navigation Paristamil advert login

இண்டியா கூட்டணி தலைவர்கள் நான் என்னும் அகங்காரம் கைவிட வேண்டும்: திருமா

இண்டியா கூட்டணி தலைவர்கள் நான் என்னும் அகங்காரம் கைவிட வேண்டும்: திருமா

9 மாசி 2025 ஞாயிறு 03:23 | பார்வைகள் : 306


இண்டி கூட்டணி தலைவர்கள், ஈகோ பிரச்னைகளை பின்னுக்கு தள்ளி நாட்டையும், மக்களையும் காப்பாற்ற சிந்திக்க வேண்டும்,” என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.

மதுரை விமான நிலையத்தில் அவர் கூறியதாவது:


டில்லியில், பா.ஜ., வெற்றி பெற்று இருப்பது பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது. இது ஒருபுறம் இருக்க, ஆம் ஆத்மி இயக்கம், இவ்வளவு மோசமான பின்னடைவை சந்திக்கும் என எதிர்பார்க்கவில்லை.

மொத்தத்தில், இண்டி கூட்டணி கட்டுக்கோப்பாக இல்லை. காங்., தன்னை சுய பரிசோதனை செய்வது அவசியம்.

காங்.,-கும், ஆம் ஆத்மியும் ஒற்றுமையாக இந்த தேர்தலை சந்திக்கவில்லை. இண்டி கூட்டணி தலைவர்கள் இதுகுறித்து ஆய்வு செய்ய வேண்டும்.

தலைவர்கள், 'ஈகோ' பிரச்னைகளை பின்னுக்கு தள்ளிவிட்டு நாட்டையும், மக்களையும் காப்பாற்ற சிந்திக்க வேண்டும். லோக்சபா தேர்தல் மட்டுமல்ல; சட்டசபை தேர்தலிலும் கூட்டணி ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய தேவை உள்ளது.

மத்திய பட்ஜெட்டில் தமிழகம் 100 சதவீதம் புறக்கணிக்கப்பட்டிருக்கிறது. பா.ஜ., -- ஆர்.எஸ்.எஸ்., தொண்டராக கவர்னர் ரவி இயங்கிக் கொண்டிருக்கிறார். தி.மு.க., ஆட்சிக்கு நெருக்கடி அளிக்கும் செயல்திட்டத்துடன் களம் இறக்கப்பட்டிருக்கிறார்.

பதற்றத்துக்கு காரணம்

திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில், வெளியூர் ஆட்கள் தான் அங்கு சென்று பிரச்னை ஏற்படுத்துகின்றனர். அங்கேயே காலம் காலமாக இருப்போருக்குள் எவ்வித பிரச்னையும் இல்லை.திருப்பரங்குன்றம் மலை பிரச்னை போலவே, தமிழகம் முழுதும் இருக்கும் அனைத்து பிரச்னைகளையுமே வருவாய்த் துறையினர் பார்க்கின்றனர். எல்லா பிரச்னைகளையும் சட்டம் - ஒழுங்கு அடிப்படையில் மட்டுமே அரசுத் துறை அதிகாரிகள் அணுகுகின்றனர். அவர்களாகவே கற்பனை செய்து கொண்டு, 'சட்டம் - ஒழுங்கு பாதிக்கப்பட்டு விடும்; அதனால் நாங்கள் தடை உத்தரவு போடுகிறோம்' என, மாவட்ட நிர்வாகம் எடுத்த முடிவுதான், தற்போது ஏற்பட்டிருக்கும் பதற்ற நிலைக்குக் காரணம். -திருமாவளவன், தலைவர், வி.சி.,



Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்