பரிஸ் : பிரித்தானிய பெண்ணை வல்லுறவுக்குட்படுத்திய சாரதி!!

18 பங்குனி 2025 செவ்வாய் 07:00 | பார்வைகள் : 2008
வாடகை மகிழுந்து சாரதி ஒருவர் பிரித்தானியாவைச் சேர்ந்த பெண் ஒருவரை பாலியல் வல்லுறவுக்குட் உட்படுத்தியுள்ளார். பரிஸ் 16 ஆம் வட்டாரத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சனிக்கிழமை காலை 7.20 மணி அளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 27 வயதுட பிரித்தானிய பெண் ஒருவர் நண்பர்களுடன் இரவு விருந்து ஒன்றை முடித்துக்கொண்டு அவர் தங்கியிருக்கும் விடுதிக்குச் செல்ல வாடகை மகிழுந்து ஒன்றை அழைத்துள்ளார்.
வாடகை மகிழுந்தில் சென்றுகொண்டிருந்த போது இரு நண்பர்களும் பாதி வழியில் இறங்கிக்கொள்ள, குறித்த பெண் தொடர்ந்து பயணித்துள்ளார். அவர் தனியாக இருக்கும் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மகிழுந்துக்குள் வைத்து குறித்த பெண்ணை சாரதி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார். இரு தடவைகள் அவர் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் அவர் பெண்ணை Bois de Boulogne பகுதியில் கீழே தள்ளிவிட்டு தப்பி ஓடியுள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண் காவல்துறையினரை அழைசித்துள்ளார். அவரை மீட்ட மருத்துவக்குழுவினர் Garches (Hauts-de-Seine) நகர மருத்துவமனையில் அனுமதித்தனர். சாரதி தேடப்பட்டு வருகிறார்.